மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு ஓகஸ்ட் 13 வரை விளக்கமறியல்
மன்னார் நீதிமன்றம் மீது கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட 13 பேரையும் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஏ. யூட்சன் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
குறித்த 13 பேரையும் இம்மாதம் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் முன்னர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் மீண்டும் இன்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
மன்னார் நீதிமன்ற பகுதியில் இன்றைய தினம் பொலிஸாரும் அதிரடி படையினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதிமன்றம் மீதான தாக்குதல்: சந்தேக நபர்களுக்கு ஓகஸ்ட் 13 வரை விளக்கமறியல்
Reviewed by NEWMANNAR
on
July 31, 2012
Rating:

No comments:
Post a Comment