கைதானவர்களை விடுவிக்க உதவுமாறு அமைச்சர் ஹக்கீமிடம் கோரிக்கை; மன்னார் நீதிமன்ற தாக்குதல் சம்பவம்
மன்னார் நீதிமன்றத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மன்னாரைச் சேர்ந்த 13 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.
மன்னாரில் கோந்தைப்பிட்டி மீன்பிடி இறங்கு துறை தொடர்பாக ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து மன்னார் உப்புக்குளம் மக்களால் கடந்த 18 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது மன்னார் நீதிமன்றத்தின் மீது கற்களால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது நீதிமன்ற கட்டடத்திற்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுத் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலரைப் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் தேடிவருவதோடு மேலும் 35 பேரை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி ஆகிய கிராமங்களுக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 பேரையும் விடுதலை செய்வதற்கு ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதே சமயம் மன்னார் நீதிமன்றத் தாக்குதல் தொடர்பில் பொலிஸாரும், குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரும் வீடியோ மற்றும் புகைப்படச் சாட்சியங்களை ஆதாரமாக வைத்துப் பலரைக் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள உப்புக்குளம் மற்றும் மூர் வீதியைச் சேர்ந்த 35 பேரில் அதிகமானவர்கள் அமைச்\ர் ரஸாத் பதீயுதினின் ஆதரவாளர்கள் மற்றும் அவருடைய அரசியல் செயற்பாட்டாளர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
இதே வேளை அண்மையில் மன்னார் ஆயருக்கு ஆதரவாக இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு ஆயருக்கு ஆதரவு தெரிவித்ததாக மன்னார் மாவட்டத்தின் மூத்த முஸ்ஸிம் ஊடகவியலாளர் மீது அமைச்சர் ரிஸாத்தின் சகோதரர் எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் தாக்குதலை நடத்தியிருந்தார்.
குறித்த தாக்குதலை நடத்தியவர் அடையாளம் காணப்பட்ட 35 பேரில் முதலாவது இடத்தில் உள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Reviewed by Admin
on
July 30, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment