மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் மன்னாரில் அவசர கலந்துரையாடல் _
இந்திய இழுவைப்படகுகளின் தாக்கம் மற்றும் வடக்கு மீனவ சமுதாயம் தற்போது முகம் கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்றுக்காலை 10 மணியளவில் மன்னார் ஹொலிடே விடுதியில் தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை தலைமையில் இடம் பெற்றது.
இதன்போது தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையின் தேசிய இணைப்பாளர் ஏ.ஜேசுதாசன்,தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் மெராண்டா ,மதத்தலைவர்கள் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.இதன் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்கொள்ளும் சகல பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் மன்னாரில் அவசர கலந்துரையாடல் _
Reviewed by Admin
on
July 14, 2012
Rating:

No comments:
Post a Comment