அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு மன்னார் நீதிமன்றம் அழைப்பாணை

மன்னார் நீதிமன்ற நீதவான் ஏ. ஜூட்சனுக்கு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் அச்சுறுத்தல் விடுத்தாக தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று, அவரினால் மன்னார் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குற்ற விசாரணைத் திணைக்களத்தினர், நீதிமன்றில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து மன்னார் நீதவான் ஏ. ஜூட்சன், அமைச்சர் ரிஷாட் பதியூதீனினால் அச்சுறுத்தப்பட்டதாக
முன்வைத்த முறைப்பாடு தொடர்பாக அமைச்சரிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.
இதன் போது, அவ்வாறான அச்சுறுத்தல் எதனையும் தாம் மேற்கொள்ளவில்லை என அமைச்சர் தெரிவித்ததாகவும், இதற்கு அமைய சம்பவம் தொடர்பில் யாரையும் கைது செய்ய வில்லை எனவும், இரகசிய காவல்துறையினர் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இன்றைய விசாரணையின் போது, மன்னார் நீதிமன்ற நீதவானும், இரகசிய காவல்துறையைச் சேர்ந்த பரிசோதகர் ஒருவரும் தமது சாட்சியங்களை வழங்கியுள்ளனர்.
அதேவேளை, தமக்கு அச்சுறுத்தல் விடுவிக்கப்பட்டமை தொடர்பான மனுவை தாமே விசாரிப்பது பொருத்தமற்றது என மன்னார் நீதவான் ஏ.ஜூட்சன், நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே பாணந்துறை நீதிமன்ற நீதவான் ரங்க திசாநாயக்க, இன்றைய விசாரணைகளை மன்னார் நீதிமன்றில் மேற்கொண்டிருந்தார்.
அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு மன்னார் நீதிமன்றம் அழைப்பாணை
Reviewed by NEWMANNAR
on
August 13, 2012
Rating:

No comments:
Post a Comment