தொடர்ச்சியான தேடலினால் வாழ்க்கை அர்த்தமும் ஆழமும் பெறுகின்றது
வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள யாஃ கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை வடமாராட்சி கலை இலக்கிய சவைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இந்நூல் வெளியீட்டு விழாவில் அடிகளார் தொடர்ந்து பேசியதாவது,
'உனக்கு தெரிந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதும், உனக்கு தெரியாதது என்ன என்பதை அறிந்துகொள்வதுமே வாழ்வின் உண்மைத் தேடல்' என்கிறார் சீனத் தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ். சிந்தனை இல்லாத படிப்பு, படிப்பு இல்லாத சிந்தனை இவை இரண்டுமே நடைமுறை வாழ்வுக்கு உதவாமல் தீமையை விளைவிக்க வல்லன. உதயகுமார் சிந்தனையோடு படிக்கின்றார். படிப்பதோடு சிந்திக்கின்றார். அதையே இந்நூல் வழியாக நம்மோடு பகிருகின்றார். ஆழமான தேடலினால் வெளிக்கொணரப்பட்டுள்ள கனதியான கருத்துக்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 'தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும். தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்' என்ற இக்கால கவிஞனின் தத்துவத்தை உதயகுமார் நன்கு தெரிந்துவைத்திருக்கிறார்போலும். அதனால்தான் அவர் தொடர்ந்து தேடுகின்றார்.
அவருடைய தேடலின் விளைவே இந்நூல்.
இன்றைய கணனி யுகத்தில் வாசிப்புப் பண்பாடு அருகி வருவது கண்கூடு. தொலைக்காட்சி, வானொலி, கணனி, அலைபேசி போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் இன்றைய இளைய தலைமுறையினரின் வாசிப்புப் பழக்கத்தை பின்னோக்கி இழுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது. வாசிப்புப் பழக்கம் குறைந்துவிட்டது என்பதைவிட வாசிப்பு முறைமை மாறிவிட்டது என்று சொல்வதே பொருத்தமானது. அச்சில் வந்த நூல்களை வாசிப்பதைவிட நேசிக்கக் கற்றுக்கொள்வோம்ளூ வாழ்க்கை அர்த்தப்படும். யோசிக்கக் கற்றுக்கொள்வோம்ளூ வாழ்க்கை ஆழப்படும். வாசிக்கக் கற்றுக்கொள்வோம்ளூ வாழ்க்கை வசப்படும்!
((Print Reading), கணனித் திரையில் வாசிக்கின்ற ((Screen Reading) நிலைமைக்கு வாசிப்பு முறைமை மாறிவிட்டது. நு டுநயசniபெ என்று சொல்லப்படுகின்ற இந்த வாசிப்பு முறை மூலம் வாசிக்கத் தெரிந்தவர்கள் எவ்வளவோ விடயங்களைக் கற்றுக்கொள்ளலாம். இதற்கு தேடல் மனம் வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்கின்ற ஆர்வம் வேண்டும்.
'வாழ்க்கையில் ஏற்பட்ட சூன்யத்தை புத்தகங்களால் நிரப்புகிறேன்' என்று பாலச்சந்தரின் 'அவள் ஒரு தொடர் கதை' படத்தில் வரும் பெண் பாத்திரம் கூறுகின்றது. 'மனிதன் அனுபவிக்கக் கிடைத்த எத்தனையோ இன்பங்களில் வாசிப்பு இன்பம் மேலானது. எவ்வளவு வாசித்தாலும் தெவிட்டுவதில்லை. ஒன்றுக்;குப்பின் ஒன்றாக பிரமிக்க வைக்கும் புத்தகங்கள் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.' என்கின்றார் எழுத்தாளர் அ. முத்துலிங்கம்.
பல்வேறு மனிதர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும் ஏற்றங்களையும் ஏற்படுத்தியவை நூல்கள் என்பதை அவர்களின் வரலாறு நமக்குச் சொல்கிறது. கிட்லருடைய வெற்றிக்குக் காரணம் மெக்கியவல்லி எழுதிய 'இளவரசன்' என்ற நூல். ஆபிரகாம் லிங்கனின் எண்ணங்களை உயர்த்தியது 'வோசிங்கரன் வரலாறு' என்ற நூல். பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்டது ரூசோவின் 'சமுதாய ஒப்பந்தம்' என்ற நூல்.
படங்களுக்கான விளக்கம்
கடந்த சனிக்கிழமை (04.08.2012) யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை சமரபாகு சீனா உதயகுமார் எழுதிய 'பகிர்வு' என்னும் கட்டுரைத்தொகுதி நூல் அறிமுக விழா வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள யா/கொற்றாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
வடமாராட்சி கலை இலக்கிய சவைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நூல் அறிமுக விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் இயக்குனரும் மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் திரு. லலிசன், திரு. இன்பரூபன் ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்.
நிகழ்வுக்கு தலைமைதாங்கிய பாடசாலையின் அதிபர் திரு. ச. செல்வானந்தன், தமிழ் நேசன் அடிகளார், திரு. லலிசன், திரு. இன்பரூபன், நூலாசிரியர் திரு. உதயகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
தொடர்ச்சியான தேடலினால் வாழ்க்கை அர்த்தமும் ஆழமும் பெறுகின்றது
Reviewed by NEWMANNAR
on
August 07, 2012
Rating:
No comments:
Post a Comment