கட்டுக்கரை குளத்தில் மீன் பிடி அதிகரிப்பு ( படங்கள் இணைப்பு)
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சியின் காரணமாக மன்னார் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதன் காரணத்தினால் கட்டுக்கரை குளத்தின் நீர் மட்டத்தை தற்தோதைய நிலையில் அளவிட முடியாத நிலையில் மிகவும் குறைந்த அளவிலேயே நீர் தற்போது உள்ளதாக முருங்கன் நீர்பாசனத்திணைக்களத்தின் பொறியியலாளர்; தெரிவித்தார்.இந்த நிலையில் குறித்த கட்டுக்கரை குளத்தில் விடப்பட்ட நண்ணீர் மீன்கள் பெரிதாக வளர்ந்த நிலையில் தற்போது இறக்கும் நிலை ஏற்பட்டள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள நண்ணீர் மீன் தொழில் செய்பவர்கள் தற்போது குறித்த மீன்களை பிடித்து விற்பனை செய்கின்றனர்.
குறித்த மீன்கள் தற்போது நாட்டின் பல பாகங்களுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றது.
எஞ்சிய மீன்களை கருவாடு போடும் வேளையும் தற்போது இடம் பெற்று வருகின்றது.ஒரு கிலோ மீன் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கட்டுக்கரை குளத்தில் மீன் பிடி அதிகரிப்பு ( படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
August 20, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 20, 2012
Rating:
.jpg)
.jpg)
.jpg)

No comments:
Post a Comment