முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்துவருடங்களின் பின் திருவிழா-படங்கள் இணைப்பு

மன்னாரின் தென்பகுதியானமுசலிப்பிரதேசத்தின் மீது கடந்த 2007ம் ஆண்டு இராணுவத்தினரின் நடவடிக்கை காரணமாக முசலிப்பிரதேச செயலாளர்பிரவிற்கு உட்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது வாழ்விடங்களை விட்டுவெளியேறியிருந்தனர்.
இவ்வாறு வெனளியேறியவர்கள் கடந்த ஐந்துவருடங்களாக மன்னார் மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசித்துவந்திருக்கின்றனர்.
இந்நிலையில் முள்ளிக்குளம் மக்கள் தம்மைதமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுமாறு தொடர்ச்சியான பல அழுத்தங்களை அரசாங்கத்திற்குகொடுத்துவந்திருக்கின்றனர்.
ஆயினும் அவர்களது எந்தக்கோரிக்கையும்சம்மந்தப்பட்டவர்களினால் நிறைவேற்றப்படாத நிலையில் அம் முள்ளிக்குள மக்கள் கடந்தஇருமாதங்களுக்கு முன் தன்னிச்சையாக முள்ளிக்குளம் கிராமத்தை அண்டிய காயாக்குழி மற்றும்மலங்காடு ஆகிய பகுதிகளில் குடியேறியிருக்கின்றனர்.
எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில்காடுகளுக்குள் குடியேறியிருக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகன்றனர்.
இது இவ்வாரிருக்க முள்ளிக்குளம்கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வழிபட்டு வந்த முள்ளிக்குளம் புனித பரலோக மாதாதேவாலயம் மற்றும் அதன் சுற்றுப்புறச்சூழல் அனைத்தும் கடற்;படையினரினால் அபகரிக்கப்பட்டுபாரிய கடற்படை முகாம் ஒன்றும் நிருவப்பட்டிருக்கின்றது.
இந்நிலையில் கடற்படையினரின் பூரனகட்டுப்பாட்டினுள் உள்ள முள்ளிக்குளம் தேவாலயத்தின்வருடாந்த திருவிழா ஆவனி மாதம் 15ம் திகதியே இடம்பெற வேண்டியது.
ஆயினும் குறித்த தினத்தில் மடு அண்னையின்திருவிழா வெகுவிமரிசையாக இடம்பெறுவதினால் முள்ளிக்குளம் தேவாலயத்தின் திருவிழாவருடந்தோறும் ஆவனி மாதம் 26ம் திகதியே இடம்பெற்று வருகின்றது.
இருந்த போதும் கடந்த ஐந்து வருடங்களாகஇவ்வாலயத்தில் திருவிழாத்திருப்பலிகள் இடம்பெறாத நிலையில் நேற்று (26.08.2012) வெகுசிறப்பாக இடம்பெற்றிருக்கின்றது.
மன்னார் ஆயர் அதிமேதகு இராயேப்பு ஜோசேப்புஆண்டகை தலமையில் இடம்பெற்ற கூட்டுத்திருப்பலியில் பெருமளவிலான குருக்கள்,துறவியர்மற்றும் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே புனித பரலோகமாதா தேவாலயதிருவிழாத்திருப்பலியில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எஸ்.வினோநோகராதலிங்கம், நானாட்டான் பிரதேச செயலாளர் திரு.சந்திரய்யா மற்றும்நானாட்டான், மன்னார் பிரதேச சபைகளின் தலைவர்கள்,அங்கத்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
குறித்த திருவிழா திருப்பலியின் போதுமுள்ளிக்களம் மக்களாகிய நாங்கள் மீண்டும் எமது சொந்த மண்ணில் குடியமர வேண்டும்எனவும்,தாங்கள் கடந்த 5 வருடங்களாக மேற்கொண்டு வந்த முயற்சி வெற்றி பெற வேண்டும்எனவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
திருவிழாத்திருப்பலியின்நிறைவில் அண்னையின் திருச்சொரூப பவணியும். அதனைத் தொடர்ந்து திருச்சொரூபஆசீரும் இடம்பெற்றிருக்கின்றது.
முள்ளிக்குளம் தேவாலயத்தில் ஐந்துவருடங்களின் பின் திருவிழா-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 27, 2012
Rating:

No comments:
Post a Comment