ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! சட்டமாஅதிபர் திணைக்களம்
மன்னார் நீதிமன்ற நீதிவானை அச்சுறுத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக அமைச்சர் ரிசாத் பதியுதீன் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்களம் உறுதி செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை காவல்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு வழங்கிய அறிக்கையிலேயே ரிசாத் பதியுதீன் மீது வழக்குப் பதிவு செய்வதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்களம் கண்டறிந்துள்ளது.
குற்றப்புலனாய்வுப் பிரிவின் ஆரம்பக்கட்ட அறிக்கையில், மன்னார் போராட்டத்தை ஒழுங்குபடுத்தியது மற்றும் நீதிவானை அச்சுறுத்தியது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இலங்கை சட்டமா அதிபர் திணைக்கள வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதையடுத்து சட்டமாஅதிபர் திணைக்களத்தின் மூத்த சட்டவாளர்கள் இலங்கை காவல்துறை அறிக்கையை ஆராய்ந்து வருவதாகவும் அடுத்த சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
ரிசாத் பதியுதீன் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன! சட்டமாஅதிபர் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
August 08, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 08, 2012
Rating:


No comments:
Post a Comment