வங்காலையில் தார் வீதி செம்மண் வீதியாக காட்சியளிக்கின்றது-படங்கள் இணைப்பு
வடக்கின் வசந்தம் வேளைத்திட்டத்தின் கீழ் மன்னார் வங்காலை கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வங்காலை மத்திய வீதி திருத்துதல் மற்றும் தாரிடல் அபிவிருத்தி வேலைக்காண ஒப்பந்த காலம் நாளை (23-08-2012) யுடன் முடிவடைகின்ற நிலையில் குறித்த வேலைத்திட்டம் இன்னும் பூர்த்தியாக்கப்படவில்லை என கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.வடக்கின் வசந்தம் வேளைத்திட்டத்தின் கீழ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு முன்னெடுத்து வரும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் கிராமிய,நகர முனைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மன்னார் வங்காலை மத்திய வீதி திருத்துதல் மற்றும் தாரிடல் அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் ஒப்பந்த காலமாக 27-04-2012 தொடக்கம் 23-08-2012 (நாளை)வரை என ஒப்பந்த பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வேலைத்திட்டத்தினை நானாட்டான் பிரதேச சபை அமுல்படுத்தியுள்ளது.
அனால் குறித்த வீதி அபிவிருத்தி பணி முழுமையடையாத நிலையில் காணப்படுகின்றது.
குறித்த காலப்பகுதிக்குள் குறித்த வேளைத்திட்டம் மந்த கதியிலே இடம் பெற்றுள்ளது.
தற்போது செம் மண் மாத்திரமே பரவப்பட்டுள்ளது.அதன் மேல் கொங்கீரீட் கல் போடப்பட்டு தார் உற்றும் வேளைகள் ஆரம்பிக்கப்படாத நிலையில் முழுமையடையாத வீதியாக ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் காணப்படுகின்றது.
தார் வீதி தற்போது செம்மண் வீதியாக காணப்படுவதாக கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனவே உரிய அதிகாரிகள் இவ்விடையத்தில் தலையிட்டு குறித்த வீதியை முழுமையக்குமாறு கிராம மக்கள் வேண்டு கொள் விடுத்துள்ளனார்.
மன்னார் நகர நிருபர்
வங்காலையில் தார் வீதி செம்மண் வீதியாக காட்சியளிக்கின்றது-படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 22, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 22, 2012
Rating:
.jpg)
.jpg)
.jpg)


No comments:
Post a Comment