மன்னார் மாவட்டத்தில் இந்திய வீடமைப்பு உதவித்திட்டதின் கீழ் பயனாளிகளை தெரிவு செய்ததில் முறைகேடு நடந்ததாக மக்கள் தெரிவிப்பு:(மக்கள் கடிதம்,வீடியோஇணைப்பு)
மன்னார் மாவட்டத்தில் இந்திய வீடமைப்பு உதவித்திட்டதின் கீழ் பயனாளிகளை தெரிவு செய்ததில் முறைகேடு நடந்ததாக மக்கள் தெரிவிப்பு
இது பற்றி தெரியவருவதாவது
மன் /86 கிராம அலுவலகர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான மாந்தை,எள்ளுப்பிட்டி,திருக்கேதீச்சரம்ஆகிய கிராமங்களில் மீளக்குடியமார்ந்த மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு பிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட 36 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இத் தெரிவில் வீடு உள்ளவர்களுக்கும்,அரச ஊழியரக்ளும் அதிக வருமானம் பெறுபவர்களுக்கும் பக்க சார்பாகவும் வழங்கப்பட்டு உள்ளது எனவும் மிகவும் வறுமைக்கோட்டில் உள்ள வாழும் தங்களுக்குஇத்திட்டம் கிடைக்கவில்லை எனவும் தாம் தொடர்ந்து குடிசையில் தள்ளப்பட்டுள்ளதாக அப்பிரதேச மக்கள் மன்னார் இணையத்துக்கு தெரிவித்துள்ளனர்
மேலும் இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானியருக்கும் முறையுட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் ..
இது தொடர்பாக மன்னார் இணையம்- மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரன்லி டிமேல் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்தெரிவித்த கருத்து காணொளியில்..
![]() |
மக்களின் முறையீட்டுக் கடிதம் |
![]() |
மக்களின் முறையீட்டுக் கடிதம் |
மன்னார் மாவட்டத்தில் இந்திய வீடமைப்பு உதவித்திட்டதின் கீழ் பயனாளிகளை தெரிவு செய்ததில் முறைகேடு நடந்ததாக மக்கள் தெரிவிப்பு:(மக்கள் கடிதம்,வீடியோஇணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
September 27, 2012
Rating:

No comments:
Post a Comment