மாந்தை மேற்கில் உருக்குலைந்த நிலையில் இரு சடலங்கள் மீட்பு
மன்னார் மாவட்டத்தின், மாந்தை மேற்கு பகுதியில் உருக்குலைந்த இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நேற்று மாலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சேத்துக்குளம் பகுதியில் இருந்தே மேற்படி சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எலும்புக்கூடுகளாக கண்டெடுக்கப்பட்டிருக்கும் சடலங்கள் இரண்டும் இறுதி யுத்தத்தில் கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளினுடைய சடலங்களாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில், குறித்த சடலங்கள் இரண்டும் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றின் அருகில் விடுதலைப் புலிகளின் இராணுவ சீருடைகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இடத்திற்கு விஜயம் செய்த மன்னார் நீதவான் அ.யூட்சன், சடலங்களை பார்வையிட்டு விசாரணைகளை நடாத்தியிருக்கின்றார். இதேவேளை, பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டின் பிற்பகுதி வரையில் மன்னார் மாவட்டத்தின் முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு பிரதேசங்கள் விடுதலைப்புலிகளின் நேரடிகட்டுப்பாட்டின்கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by NEWMANNAR
on
September 14, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 14, 2012
Rating:

No comments:
Post a Comment