துரித கதியில் வளர்ச்சியடைந்துள்ள மன்னார் உப்பளம்- படங்கள் இணைப்பு
மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையம் தற்போது நவீன மயப்படுத்தப்பட்டுள்ளதோடு துரித கதியில் வளர்ச்சியடைந்து பலருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
கடந்த காலங்களில் மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் பல வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன.
குறிப்பாக இயந்திரங்கள் அதிகளவில் இல்லை.இதனால் தொழிலாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
தற்போது உப்பு உற்பத்தி நிலையத்துக்கு பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. உப்பளத்தில் தற்போது 60 க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 ரூபா முதல் 750 ரூபா வரை சம்பளம் பெற்றுக்கொள்கின்றார்கள்.
உப்பு அள்ளுதல்,உலர வைத்தல்,சுத்தப்படுத்துதல்,பைக்கற்றுகளில் அடைத்தல்,பொதி செய்தல் போன்ற வேலைகளில் அதிகளவான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் மன்னார் மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் பல வசதிக் குறைபாடுகள் காணப்பட்டன.
குறிப்பாக இயந்திரங்கள் அதிகளவில் இல்லை.இதனால் தொழிலாளர்கள் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
தற்போது உப்பு உற்பத்தி நிலையத்துக்கு பல்வேறு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. உப்பளத்தில் தற்போது 60 க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து வருகின்றார்கள். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 ரூபா முதல் 750 ரூபா வரை சம்பளம் பெற்றுக்கொள்கின்றார்கள்.
உப்பு அள்ளுதல்,உலர வைத்தல்,சுத்தப்படுத்துதல்,பைக்கற்றுகளில் அடைத்தல்,பொதி செய்தல் போன்ற வேலைகளில் அதிகளவான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
துரித கதியில் வளர்ச்சியடைந்துள்ள மன்னார் உப்பளம்- படங்கள் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
September 17, 2012
Rating:

No comments:
Post a Comment