சர்வமத அமைப்பின் புதிய குழு மன்னார் மாவட்டம்.
சமாதானத்திற்கும் மீளிணக்கத்திற்குமான வளங்களின் (RPR) அனுசரனையுடன் புதிய சர்வமத செயற்குழு கடந்த 23.09.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் அங்குராப்பணம் செய்யப்பட்டது.
இதன் இணைத்தலைவர்களாக சிவஸ்ரீ மகா தர்மகுமாரகுருக்கள், அருட்தந்தை தமிழ்நேசன் அடிகளார், மௌலவி ஆசீம், அருட்திரு தயாளன், சங்கைக்குரிய தேரர் , செயலாளராக சட்டத்தரணி வினோதன், பொருளாளராக மாதர் ஒன்றிய பணிப்பாளர் மகாலட்சுமி ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
இக்குழுவில் நிர்வாக அங்கத்தவர்களாக மனோ ஐங்கரசர்மா, அதிபர் அருட்சகோதரி ரூபரானி, பிரஜைகள் குழு தலைவர் , பொறியியலாளர் இராமகிருஸ்ணன், மக்கள் காதர், Pளுடு பணிப்பாளர் ரசாக், அதிபர் தயானந்தராஜா, சட்டத்தரனி சபுறுதீன், கிராம அலுவலர்களுக்கான அதிகாரி ராதா உட்பட 25 பேர் கொண்ட நிறைவேற்றுக்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
இவ் சர்வமத அமைப்பின் பிரதான பணியாக மதங்களுக்கிடையிலான ஒற்றுமைகளை கட்டியெழுப்புவதும்; பரஸ்பரம் புரிந்துணர்வுக்கு வழிசமைத்தல் மற்றும் நீதி, நியாயமான தீர்வுகளை வழங்குதல் என்பனவாகும்.
அன்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் நிலவும் பிரச்சணைகளை தீர்க்க முற்சிப்பது எனவும் எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சணைகள் ஏற்படாமல் பாதுகாப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
சர்வமத அமைப்பின் புதிய குழு மன்னார் மாவட்டம்.
Reviewed by NEWMANNAR
on
September 26, 2012
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2012
Rating:

No comments:
Post a Comment