அண்மைய செய்திகள்

recent
-

புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் தொடர்ந்து மூன்றாம் வருடமும் தொடர் சாதனை-படங்கள் இணைப்பு

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 19 வயதுப்பிரிவு உதைபந்தாட்ட அணி தொடர்ச்சியாக மூன்றாம் வருடமும் அகில இலங்கைச் சம்பியன் ஆனது. இப்பாடசாலை 1999 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாடசாலை மட்ட உதைபந்தாட்டப் போட்டியில் முதல் தடவையாக அகில இலங்கைச் சம்பியன் ஆனது. அன்றிலிருந்து இப்பாடசாலை தொடர்ச்சியாக தேசிய மட்ட சாதனைகளை படைத்துக்கொண்டிருக்கின்றது. இப்பாடசாலையின் உதைபந்தாட்ட அணிகளின் இச் சாதனை தேசிய மட்டத்திலான அப் பாடசாலையின் 21வது சாதனையாகும்.


இவ்வருடச் சாதனையானது 19 வயதுப்பிரிவு உதைபந்தாட்ட அணி 2010, 2011, 2012 ஆகிய மூன்று வருடங்களிலும் தொடர்ச்சியாக தேசிய மட்டத்தில் முதல் இடத்தைப் பெற்று தொடர் சாதனையாகும். இப் போட்டித் தொடரின் மற்றுமொரு வரலாற்றுச் சாதனை இறுதிப் போட்டியில் மோதிய இரு அணிகளும் வடமாகாண அணிகளாயிருப்பதாகும்.


இச்சாதனை படைத்த அணிவீரர்களும் பயிற்றுவிப்பாளரும் 12.09.2012 புதன்கிழமையன்று காலை 9.30 மணியளவில் மன்னார் நகரின் மத்தியபகுதியில் வைத்து கௌரவிக்கப்பட்டு பாடசாலை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிகழ்வில் மன்னார் வலயக்கல்வி அலுவலகம் சார்பாக வலயக்கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவலிக்கல்விப் பணிப்பாளர்கள், மற்றும் ஆசிரிய ஆலோசகர்களும் கலந்து கொண்டதுடன் மன்னார் நகர பிதா அவர்களும் , மேலதிக அரசாங்க அதிபரும், இராணுவ பிரிகேடியர், பொலிஸ் அதிகாரிகள் , சமயப் பெரியார்கள் பாடசாலைஅதிபர்கள் என பலரும் கலந்து கொண்டு வீரர்களையும் பணிற்றுவிப்பாளரையும் வாழ்த்தி ஆசிகளை வழங்கினர்.
புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி தேசிய மட்டத்தில் தொடர்ந்து மூன்றாம் வருடமும் தொடர் சாதனை-படங்கள் இணைப்பு Reviewed by NEWMANNAR on September 19, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.