அண்மைய செய்திகள்

recent
-

இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் கருத்தரங்கு-பட இணைப்பு

இளைஞர்களுக்கான  நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவரும் ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ அவர்களின் ஏற்பாட்டில் 'நாளைய உலகை வெற்றி கொள்ள பண்பாட்டு அறிவை வளர்ப்போம்' எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் இம்முறை க.பொ.தா.சாதாரண தரப்பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான  கருத்தரங்கு  வியாழக்கிழமை மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டது.




 மன்-சித்திவிநாயகர் இந்து தேசியபாடசாலை,மன்-பேசாலை பற்றிமா ம.வி,மன்-முருங்கன் ம.வி ஆகிய மூன்று பாடசாலைகளிலும் குறித்த கருத்தரங்கு இடம் பெற்றது  இந்த நிலையில் மன்-சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையல் குறித்த கருத்தரங்கு வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 இதன் போது மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான்,இராணுவத்தின் 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் மைத்திரி டயேஸ்,கேனல் ராமநாயக்க,நாமல் ராஜபக்ஸ எம்.பி யின் இணைப்பாளர் தேசப்பிரிய உட்பட மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.









இதன் போது சுமார் 500 இற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டனர். 
இளைஞர்களுக்கான நாளைய அமைப்பின் ஏற்பாட்டில் மன்னாரில் கருத்தரங்கு-பட இணைப்பு Reviewed by NEWMANNAR on October 28, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.