மன்னார் எள்ளுப்பிட்டி கிராமத்திற்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்குக. -மாந்தை கிராம அபிவிருத்திச்சங்கம் கோரிக்கை

இவ்விடையம் தொடர்பில் மாந்தை கிராம அபிவிருத்திச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள திருக்கேதிஸ்வரம் கிராம அலுவலகர் பிரிவுக்குற்பட்ட எள்ளுப்பிட்டி என்ற கிராம மக்கள் நாட்டில் ஏற்பட்டிருந்த போர்ச்சூழல் காரணமாக 1990 ஆம் ஆண்டு ஆனி மாதம் கிராமத்தை விட்டு முற்றாக இடம் பெயர்ந்து மடுக்கோவில் மற்றும் ஏனைய பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர்.இந்த நிலையில் 2010 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 20 ஆம் திகதி மீளக்குடியமர்த்தப்பட்டனர்.நெற்
அன்றிலிருந்து குறித்த கிராம மக்கள் வாழ்வாதார முன்னேற்பாடுகளில் பெரிய பின்னடைவுகளை எதிர் நோக்கியவர்களாகவே உள்ளனர்.
நெற்செய்கை,தோட்டச்செய்கைகள் போன்ற நடவடிக்கைகளில் அடியெடுத்து வைக்க முடியாத நிலையிலேய இவர்கள் இன்னமும் உள்ளனர்.
இவ்வேளையில் இந்திய வீட்டுத்திட்டத்தின் மூலம் இந்தக்கிராமத்திற்கு முன்னுரிமை கொடுப்பதாக மன்னார் பிரதேச செயலகம் உறுதியளித்திருந்த போதும் மீளக்குடியமர்ந்த 102 குடும்பங்களில் 47 குடும்பங்களுக்கு மாத்திரமே இந்திய வீட்டுத்திட்டத்திற்கென 'ஜனாதிபதி படையனியின்' அனுமதி பெறுவதற்கான சுபார்சுக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கான அனுமதியும் பெறப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இவ்வாறான நிலையில் ஏன் ஏனைய குடும்பங்கள் விலக்கப்பட்டன என்பது கூட தெரியாத நிலையிலே காணப்படுகின்றது.
அது மட்டுமன்றி அனுமதி பெறப்பட்ட பட்டியலில் 5 குடும்பங்கள் எமது கிராமத்தைச் செராதவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது கிராம அலுவலகர் பிரிவில் திருக்கேதிஸ்வரம் கிராமத்தில் குடியிருக்கும் பல குடும்பங்களையும் எள்ளுப்பிட்டி கிராமம் என்ற தலைப்பில் இணைத்து வீட்டுத்திட்டத்தில் நடை முறைப்படுத்துவது எம் இரு கிராம மக்களிடையே பாரிய கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களுக்கென தனியான பட்டியலின் கீழ் எவ்வித உதவிகளையும் செய்வதற்கு நாம் என்றும் எதிர்ப்பானவர்களாக இருக்க மாட்டோம் என்பதனையும் கூறிக்கொள்வதோடு இச்செயற்பாடுகள் யாவும் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதும் புரியாத புதிராகவுள்ளது.
-1990 ஆம் ஆண்டு இடம் பெயர்ந்து 2010 ஆம் ஆண்;டு 20 வருடங்களின் பின் மீண்டும் மீள் குடியேற்றப்பட்டாலும் எமது அழிந்து போன வீடுகள்,உடமைகள்,ஏனைய சொத்துக்களுக்கான இழப்பீடுகள் எவையேனும் இன்று வரை அரசாங்கத்தினாலோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தினாலோ வழங்கப்படவில்லை என்பது கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடையமாகும்.
இதே காலப்பகுதியில் மன்னார் மாவட்டத்தில் இடம் பெயர்ந்து மீள் குடியமர்த்தப்பட்ட பல கிராமங்கள் முழுமையான வீட்டுத்திட்டத்தை பெற்றிருக்கின்றன என்பதும் வெளிப்படையான உண்மையாகும்.
ஆகவே இவ்வீட்டுத்திட்டத்தின் மூலம் எமது கிராமத்தில் சகல குடும்பங்களும் வீடுகளைப்பெறுவதற்கு தகுதியானவர்களே என்பதை தெரிவிப்பதோடு இதனால் அனைவரும் நண்மை பெற ஆவனம் செய்யவேண்டுமெனவும் பணிவுடன் வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பு பட்ட செய்தி
மன்னார் எள்ளுப்பிட்டி கிராமத்திற்கு இந்திய வீட்டுத்திட்டம் வழங்குக. -மாந்தை கிராம அபிவிருத்திச்சங்கம் கோரிக்கை
Reviewed by Admin
on
October 04, 2012
Rating:

No comments:
Post a Comment