அண்மைய செய்திகள்

recent
-

உடல் அங்கங்களை இழந்தவர்களுக்கு மன்னார் மெத்தா நிறுவனம் செயற்கை அங்கங்களை பொருத்தி உதவி - படங்கள் இணைப்பு,

மன்னார் வைத்தியசாலையில் இயங்கி வரும் செயற்கை அவயங்கள் பெருத்தும் நிலையமான மெத்தா நிறுவனம் கடந்த வாரம் கண்டியில் உள்ள பொல்காங்க எனும் இடத்தில் நீரிழிவு நோயினால், சாலை விபத்தினால், பிறப்பினால் உடல் அங்கங்கள் துண்டிக்கப்பட்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடமாடும் சேவையை வைத்திய கலாநிதி பி. பனாகமுவ தலைமையின் கீழ் 08 பேர் கெண்ட குழுவினரால் நடாத்தப்பட்டதாக ,மன்னார் பொது வைத்தியசாலையின்    மெத்தா நிறுவன தொடர்பு அதிகாரி சின்கிலேயர் பீற்றர் தெரிவித்தார்.


இதில் அதிகமாக 22 ஆண்களும் 02 பெண்களுக்கும் 03 சிறுவர்களும் அடங்குவர். இவர்களுக்கு பொய்க்கால் பொருத்துவதற்காகவும் சக்கர நாட்காளி வழங்குவதற்காகவும் அளவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இரு கிழமையின் பின் இவர்களுக்கு அவயங்கள் இலவசமாக பொருத்தப்பட உள்ளன.

மேலும் இச் சேவைகளை இலவசமாக பெற விரும்பும் வன்னிப் பகுதி பாடசலை அதிபர்கள் இந்து, பௌத்த, கிறிஸ்தவ, முஸ்லிம், சமய நிறுவனங்கள் உங்கள் பகுதிகளில் ஊனமுற்றவர்கள் இருப்பின் அவர்களின் N;தவையை அறிந்து விபரங்களை எமக்கு கடிதம் மூலமாக கீழ்க்கண்ட விலாசத்திற்கு அனுப்பிவைத்தால் 10 நபர்களுக்கு மேல் இருப்பின் மெத்தா நிறுவனம் அப்பகுதியில் நேரடியாக வந்து நடமாடும் சேவையை நடாத்தி உதவி வழங்கவும் உள்ளது. 





யுத்தம் முடிவுற்று 3 வருடங்களின் பின்பும் கன்னி வெடிகளின் பாதிப்பினால் பாதசாரிகள், சிறுவர்கள், பெண்கள், வடமாகாணத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே குறித்த உதவியை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் திரு.சின்கிலேயர் பீற்றர் ,மெத்தா நிறுவன தொடர்பு அதிகாரி வைத்திய சாலை,மன்னார் என்ற முகவரியுடனும் அல்லது  023-3230473 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் அங்கங்களை இழந்தவர்களுக்கு மன்னார் மெத்தா நிறுவனம் செயற்கை அங்கங்களை பொருத்தி உதவி - படங்கள் இணைப்பு, Reviewed by NEWMANNAR on October 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.