அண்மைய செய்திகள்

recent
-

இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னாரில் பயணாளிகளை தெரிவு செய்ததில் மன்னார் பிரதேச செயலகம் பாரம்பட்சமும் ,காணி மோசடியும் -ஆதாரம் இணைப்பு~{சிறப்புசெய்தி}

மாந்தை திருகேதீஸ்வரம் கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட இந்திய வீட்டு திட்டத்தில் பயனாளிகள் தெரிவு செய்வதில் முறைகேடு நடை பெற்றதாக எமது இணையத்தளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தோம் இருப்பினும் இது தொடர்பாக பிரதேச செயலகம்  முறைகேடுகள் நடைபெறவில்லை என்றும் சில நியமங்கள் வழங்கப்பட்டு அவற்றின் புள்ளிகளின் அடிப்படையிலேயே தெரிவுகள் இடம் பெற்றதாகவும் தெரிவித்திருந்தனர் .


இது தொடர்பாக மேலதிக தகவல்கள் மன்னார் இணையத்துக்கு கிடைத்துள்ளது .


இப் பயனாளர் தெரிவில் தகுதி அற்றவர்களுக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் ஆதாரங்களுடன் எமக்கு மக்கள்   அறியத்தந்துள்ளனர்  அவ்விபரங்கள் வருமாறு ...

மன் /86 கிராம அலுவலகர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான மாந்தை,எள்ளுப்பிட்டி,திருக்கேதீச்சரம்ஆகிய கிராமங்களில்  மீளக்குடியமார்ந்த மக்களுக்கு வீடுகள் வழங்குவதற்கு  பிரதேச செயலாளரினால் தெரிவு செய்யப்பட்ட 36 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 


-இந்த தெரிவில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் இதற்கு மன்னார் பிரதேசசெயலகமும் சேர்ந்து இயக்கம் தொண்டு-நிறுவனங்களும் உடந்தையாகவே  இருப்பதாகவும் தங்கள் தகுந்த ஆதாரத்துடன் முறையிட்டும் அவர்கள் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். 

தெரிவு செய்யப்படவர்களின் சிலர் பற்றி 
*  அன்டன் சுசிலாதேவி  என்பவர் தாதியாக கடமை புரிபவர் இவருடைய கணவன் அன்ர நேசன்  மாந்தை மே . கூட்டுறவு சங்கத்தின் கிளையில்  முகாமையாளராக கடமை புரிகின்றார்.

* தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் ஒருவருக்கு வஞ்சியக் குளத்தில் சொந்தமாக வீடு உள்ளது மற்றும் இவர் தென்னை,பனை கூட்டுறவு சங்கத்தில் கடமை புரிவதுடன் இவர் 25000 இற்கும்  மேல் சம்பளம் பெறுபவர் ஆவார்

ரூ 25000 மேல் வருமானம் பெறுபவர்கள் என உறுதிப்படுத்த தகுந்த ஆதாரம் இருந்து எவ்வாறு இவர்களை  தெரிவு செய்யமுடியும்?


இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள்  தெரிவிக்கையில் இவர்களது சிபாரிசுக்கடிதம் உரிய மன்/86  கிராம சேவகரிடம் இருந்து உறுதிப்படுத்தாமல் வேறு ஒரு கிராம சேவகரே  உறுதிப்படுத்தியுள்ளார் 

இது தொடர்பாக மன்னார் இணையம் மன்/86  கிராமசேவையாரை  தொடர்பு கொண்டு கேட்டபோது   தான்  இவர்களுக்கா சிபாரிசு கடிதத்தில் கையொப்பம் இடவில்லை உண்மைதான் என்றார். 

இவருக்கு பதிலாக பிரதேசசெயலகமே வேறு ஒரு கிராமசேவையலரிடம் கையொப்பத்தை பெற்று தகுதியற்றவர்களையும் வேண்டப்பட்டவர்களையும் தெரிவுசெய்துள்ளனர் என கருதவேண்டி உள்ளது .


மேலும் மேலே குறிப்பிட்டுள்ள சுசீலாதேவி  என்பவருக்கு வழங்கப்பட்டுள்ள காணி தொடர்பாக தருமலிங்கம் பகீரதன் என்பவர் தெரிவித்துள்ளதாவது

திருக்கேதீஸ்வரத்தில் 2004 ம்ஆண்டு   எனக்கு காணி வழங்கப்பட்டது நாட்டு நிலைமை காரணமாக உடனடியாக குடியேற முடியவில்லை பின்னர் ஒப்பந்தக்காலத்தில் வேலிகள் அடைக்க சென்ற பொது கிராம சேவகர் தற்போது வேலி அடைக்க வேண்டாம் என தடுத்து விட்டார்.பின்னர்  நான் வன்னியில் வசித்து இடம் பெயர்ந்து செட்டிக்குளம் முகாமில் இருந்து மீள் குடியேறுவதற்கு எனது காணிக்கு வந்தபோது அங்கு 3 குடும்பங்கள்  வசித்தன இது பற்றி கிராம செயலாளரிடமும்,பிரதேச செயலாளரிடமும் முறையிட்ட போது எந்த பிரச்சினையும் இல்லை இவர்களுக்கு காணி வழங்கப்பட்டதன் பின் உனது காணி உனக்கு தரப்படும் என்றனர்,

பின்னர் நான்  கிராம சேவகரிடம் சென்றபோது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை சுசிலாதேவி என்பவருக்கு எனது காணி ரகசியமான முறையில் எழுதப்பட்டு விட்டது .பின்னர் கிராமசேவகரிடம் முறை இட்ட போது அவருக்கும் காணி நடவடிக்கைக்கும் சம்பந்தம் இல்லை எனவும் ,உதவி அரசாங்க அதிபரிடம் முறையிடுமாறும் கூறினார் உதவி அரசாங்க அதிபரைசந்திக்க   முற்பட்டபோது காணி தொடர்பாக யாரும் சந்திக்க அனுமதி இல்லை என மறுக்கப்பட்டது,பின்னர் நான் உதவி அரசாங்க 2 அதிபருக்கு கடிதங்கள் அனுப்பியும் எந்தப்பதிலும் எனக்கு வரவில்லை.

மேலும் 2004 ம் ஆண்டு மீள்   குடியேறிய  சிலருக்குத்தான் காணி பதிவு வழங்கப்பட்டது ஆனால்  சுசிலாதேவி 2010 இல் தான் மீள் குடியேறிவர் அவருக்கு எக் காரணத்தினால் எனது காணி வழங்கப்பட்டது என  ,தெரியவில்லை எனது காணி ஏன்  பறிக்கப்பட்டது எனவும் தெரியவில்லை,
எனவும் தெரிவித்தார் 

இது தொடர்பாக காணி -நிருவாக திணைக்களத்துக்கும்  தெரிவித்துள்ளார்   

 இவ்விடயம்  தொடர்பாவும்  காணி -நிருவாக திணைக்களம்  மன்னார் பிரதேசசெயலாருக்கு  கடிதம் அனுப்பி உள்ளதுடன்  விரவிரிவான அறிக்கை அனுப்பு மாறு கேட்டுக்கொண்டுள்ளது .

 தகுதியற்றவர்களை தெரிவுசெய்துள்ளனர் என ஏற்கனவே எமது இணையம் செய்தி வெளியிட்டிருந்து  சம்பந்தபட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நம்பினோம் அவர்கள் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை .

 இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் கலவரத்திற்கு பின்னரான மீளெழிற்சித்திட்ட அலுவலகம் (Red Cross Post Conflict Recovery Programme ( RC PCRP) office in Vavuniya) மற்றும் மன்னார்  பிரதேசசெயலகம் என்பன மக்களின் மனுவை கவனத்தில் எடுக்காமல்  தொண்டு நிறுவனங்களும் துணைபோவது மக்கள் மனதில்    அவ  நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது  அப்படியே செயல்படுத்த முனைப்பு காட்டுவதால் தான் நாங்கள் ஆதாரத்துடன் இணைத்துள்ளோம்.



-இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்படட்டவர்கள் என்ன -நடவடிக்கை எடுக்கப்போகிறார்கள் என்பதை  மன்னார் இணையம் அவதானித்துக்கொண்டே இருக்கும் .







இந்திய வீட்டுத்திட்டத்தில் மன்னாரில் பயணாளிகளை தெரிவு செய்ததில் மன்னார் பிரதேச செயலகம் பாரம்பட்சமும் ,காணி மோசடியும் -ஆதாரம் இணைப்பு~{சிறப்புசெய்தி} Reviewed by NEWMANNAR on October 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.