மன்னாரில் காணி சுவீகரிப்புக்கு எதிரான தேசிய வாரம் அனுஷ்டிப்பு
கிராமம் மற்றும் பிரதேசங்களில் உணவு தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காக பூமி, நீர் மற்றும் விதைகளுக்கான மக்கள் உரிமையை உறுதிப்படுத்தும் தொனிப்பொருளில் காணி கொள்ளைக்கு எதிரான தேசிய வாரம் இன்று செவ்வாய்ககிழமை முதல் மன்னார் மாவட்ட தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையினால் மன்னார் மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வருவதாக அப்பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சூசை தெரிவித்தார்.
குறித்த நிகழ்வுகள் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும், உலகளாவிய ரீதியிலும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இன்றும் நாளையும் கிராம மட்டத்தில் உள்ள அமைப்புக்களுடன் கலந்துரையாடுதல், 11ஆம் திகதி மாவட்ட மட்டத்திலான கலந்துரையாடல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான மகாநாடு, 12ஆம் திகதி இடம் பெயர்ந்து அல்லலுரும் முள்ளிக்குளம் மற்றும் பேசாலை 50 வீட்டுத்திட்ட கிராம மக்கள் தமது பிரச்சினைகள் அடங்கிய மகஜர் கையளித்தல், 14ஆம் திகதி சர்வமத வழிபாடுகளை மேற்கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு பேரவையின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சுனேஸ் மேலும் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
October 09, 2012
Rating:

No comments:
Post a Comment