அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் காற்றுடன் கூடிய மழை-பட இணைப்பு.

மன்னாரில் நேற்று திங்கட்கிழமை இரவு முதல் வீசிவந்த கடும் காற்று மற்றும் மழையினைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை மன்னாரில் அதிகலவான மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்லாத நிலையில் கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட தமது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.



 கடலில் கொந்தளிப்புக்களும் தற்போது தற்போது ஏற்பட்டுள்ளது.நாட்டின் பல பாகங்களில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதற்கு அமைவாக மன்னார் மாவட்டத்திலும் காலநிலை மாற்றத்திற்கு அமைவாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது.

 இந்த நிலையில் மன்னாரில் நேற்ற 29 ஆம் திகதி காலை 8.30 மணி தொடக்கம் 30-10-2012 இன்று காலை 8.30 மணிவரை 19.3 மில்லி மீற்றர் மழை பெய்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 தற்போது தொடர்ந்தும் மன்னாரில் மழை பெய்து வருகின்றது.இதனால் போக்குவரத்துக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.





 மன்னாரின் பல பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்லாத போதும் கரை வலை மீன்டி பிடி தொழிலாளர்கள் தொழிலுக்குச் சென்றுள்ளனர்.
மன்னாரில் காற்றுடன் கூடிய மழை-பட இணைப்பு. Reviewed by NEWMANNAR on October 30, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.