அண்மைய செய்திகள்

recent
-

வன்னியில் தொடரும் அடைமழை; 503 குடும்பங்கள் இடம்பெயர்வு

வன்னிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் 6,497 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுகள் தெரிவித்துள்ளன. இதில் 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் இடம்பெயர்ந்து இடைத் தங்கல் முகாம்களில் தங்கியுள்ளனர். 

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட யக்கச்சி, அல்லிப்பளை, இத்தாவில், முகமாலை ஆகிய கிராமங்களில் 171 குடும்பங்களைச் சேர்ந்த 684 பேரும்; பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் நல்லூரில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேரும், கண்டாவளைப் பிரதேச செயலகப் பிரிவில் 33 குடும்பங்களைச் சேர்ந்த 114 பேருமாக 214 குடும்பங்களைச் சேர்ந்த 853 குடும்பங்கள் இடம்பெயர்ந்து வேறு இடங்களில் தங்கியுள்ளன என கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் திருமுறிகண்டியில் 152 குடும்பங்களைச் சேர்ந்த 480 பேரும், இந்துபுரத்தைச் சேர்ந்த 122 குடும்பங்களைச் சேர்ந்த 405 பேரும், முத்துஐயன்கட்டைச் சேர்ந்த 153 குடும்பங்களைச் சேர்ந்த 502 பேரும், பண்டாரவன்னிக் கிராமத்தைச் சேர்ந்த 55 குடும்பங்களைச் சேர்ந்த 218 பேரும், பேராறைச் சேர்ந்த 45குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரும், முத்துவிநாயகபுரத்தைச் சேர்ந்த 62 குடும்பங்களைச் சேர்ந்த 227 பேரும், கனகரத்தினபுரத்தைச் சேர்ந்த 58 குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. 

வன்னியில் தொடரும் அடைமழை; 503 குடும்பங்கள் இடம்பெயர்வு Reviewed by NEWMANNAR on October 31, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.