மன்-மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை.
மன்-மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை பூர்த்தி செய்யுமாறு கோரி அப்பாடசாலையின் அபிவிருத்திச்சங்கம் பெற்றோர்களின் கையேழுத்துக்களுடன் கூடிய கடிதம் ஒன்றை மன்னார் வலயக்கல்விப்பாணிப்பாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த 2 ஆம் தவணை ஆரம்பத்தின் போது இப்பாடசாலையில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் பலர் திடீர் என இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதனால் அப்பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் நால்வரில் ஒருவர் விஞ்ஞான பாட ஆசிரியரும்,மூன்று ஆரம்பக்கல்வி ஆசிரியர்களுமே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால் புதிதாக இரண்டு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இவ் ஆசிரியர் இடமாற்றம் இப்பாடசாலையில் கல்வி கற்கும் 142 பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தை பெரிதும் பாதித்துள்ளது.
இவ்விடயமாக கடந்த யூன் மாதம் எமது பெற்றோர்கள் குழுவொன்று தங்களை அணுகிய போதும் இன்னும் ஒரு வார காலம் பொறுத்துக்கொள்ளுங்கள் உங்கள் பாடசாலைக்குத்தேவையான ஆசிரியர்களை நியமித்துத்தருகின்றோம் எனக்கூறினீர்கள்.
ஆனால் தங்களால் கூறப்பட்ட காலங்கள் முடிந்து நீண்ட காலமாகியும் இது வரை ஆசிரியர்கள் நியமித்து தரப்படாமை மிகவும் வேதனையளிக்கின்றது.
எனவே இங்கு கல்வி கற்கும் 68 ஆரம்பக்கல்வி மாணவர்களினதும்;,74 இடை நிலைக்கல்வி மாணவர்களினதும் எதிர்காலக்கல்வியினைக்கருத்தில் கொண்டு ஒரு விஞ்ஞான ஆசிரியர்,ஒரு சங்கீத ஆசிரியர்,ஒரு ஆரம்பக்கல்வி ஆசிரியர் ஆகிய மூன்று ஆசிரியர்களையும் உடன் நியமித்துத்தருமாறு மிகவும் தயவுடன் தங்களை கேட்டு நிற்கின்றோம்.என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்-மாவிலங்கேணி றோ.க.த.க.பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறையினை பூர்த்தி செய்யுமாறு கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
October 19, 2012
Rating:

No comments:
Post a Comment