அடை மழையின் மத்தியிலும் நடைபெற்ற மரியன்னையின் திருச்சுரூப திருப்பவனி.(படங்கள் இணைப்பு)

இத் திருப்பவனியானது உயிலங்குளம் பங்குத்தந்தை அருட்பணி பிரான்சிஸ் மெரி டிகோல் அவா்களின் தலைமையில் 14.10.2012 அன்று மாலை வேளையில் பங்குமக்கள் அனைவரதும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.
இப் பவனியில் உயிலங்குளம் பங்கின் துணை ஆலயங்களான கள்ளிகட்டைக்காடு, சிறு நீலாசேனை, நொச்சிக்குளம், தேத்தாவாடி மருதங்குளம், முதலைகுத்தி, உயிலங்குளம், பெரிய நீலாசேனை, மணற்குளம், பாலைக்குளி, காத்தான்குளம், பறப்பாங்கண்டல், உயிர்த்தராசன்குளம் ஆகிய ஆலயங்களைச் சோ்ந்த பெருந்திரளான இறை மக்களும் கலந்து கொண்டார்கள்.
முன்னதாக இப்பவனியானது மாலை 04.00 மணியளவில் கள்ளிகட்டைக்காட்டில் ஆரம்பிக்கப்பட்டு மன்னார்-மதவாச்சி பிரதான வீதி ஊடாக உயிர்த்தராசன்குளம் வரை சுமார் 8 km தூரம் வரை இடம்பெற்றது .
விசேடமாக அலங்கரிக்கப்பட்ட ஊா்தியில் மரியன்னையின் திருச்சுரூபம் தாங்கி வரப்பட்டு இடையிடையே மறையுரைகளும் இடம்பெற்றன. மறையுரைகளை அருட்பணி ரமேஸ் (O.M.I), அருட்பணி முரளிதரன் அவா்களும் வழங்கினா்.
இறுதி திருச்சுரூப ஆசீரை மன்னார் மறைமாவட்ட குருமுதல்வா் அருட்பணி விக்டா் சோசை அவா்கள் வழங்கினார். கொட்டும் மழையிலும் இடம்பெற்ற இப் பவனியின் போது பாடசாலை மாணவ தலைவா்கள், சாரணா்கள் கடமையாற்றியதுடன் இலங்கை காவல் துறையினரும் வீதி ஒழுங்குகளைக் கவனித்து தமது ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனா்.
அடை மழையின் மத்தியிலும் நடைபெற்ற மரியன்னையின் திருச்சுரூப திருப்பவனி.(படங்கள் இணைப்பு)
Reviewed by மன்னார் மன்னன்
on
October 15, 2012
Rating:

No comments:
Post a Comment