அண்மைய செய்திகள்

recent
-

செல்வம் எம்.பி.யின் உறவினர் காணவில்லையென முறைப்பாடு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் உறவினர் ஒருவரை கடந்த 30 ஆம் திகதி முதல் காணவில்லை என காணாமல் போனவரது மனைவி கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் நேற்று முறையிட்டுள்ளார்.
தனது மனைவியின் சகோதரரான சின்னத்துரை இந்திரேஸ்வரன் (வயது-60) என்பவரே காணமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.



கடந்த 30 ஆம் திகதி காலை 6.15 மணியளவில் குறித்த நபர் தனது வீட்டில் இருந்து, தான் வேலை செய்யும் கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள நகைக்கடைக்குச் சென்ற பின் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.

அதன் பின்னரே அவர் காணாமல் போயுள்ளதாக, காணாமல் போன சின்னத்துரை இந்திரேஸ்வரன் என்பவரின் மனைவி தெரிவித்தார். காணாமல் பொன சின்னத்துரை இந்திரேஸ்வரன் நகைக்கடையில் கணக்காளராக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தனது மனைவியின் சகோதரர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செல்வம் எம்.பி.யின் உறவினர் காணவில்லையென முறைப்பாடு Reviewed by NEWMANNAR on November 01, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.