அண்மைய செய்திகள்

recent
-

எமது கிராமங்களின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கையில் இருக்கின்ற இளைஞர்களுக்கான ஒரு சட்ட ரீதியான நிறுவனமாக இருக்கின்றது.இன்றைய இளைஞர்களின் ஆற்றலை பொருளாதார ரீதியாகவும்,கலாச்சார ரீதியாகவும்,விளையாட்டு ரீதியாகவும் இளைஞர்களிடம் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டுவரும் ஒரு நிறுவனமாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் செயற்பட்டு வருகின்றதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தெரிவித்தார்.


 தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச இளைஞர் கழகங்களின் அதிகாரிகளுக்கான  மாவட்ட மட்டத்திலான பயிற்சி வேலைத்திட்டம் ஒன்று கடந்த சனிக்கிழமை(17-11-2012) மன்னார் முருங்கன் ம.வி பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

 அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில்,,,

 இங்குள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் மன்னார்,வவுனியா ஆகிய மாவட்டங்களில் உள்ள 9 பிரதேசச் செயலகங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களின் தலைவர்களாக காணப்படுகின்றீர்கள். இவர்கள் அனைவரும் மிக முக்கிய இடத்தைப்பெற்றவர்களாக காணப்படுகின்றீர்கள்.அவ்வாறனவர்களையே நாங்கள் இந்த நிகழ்வில் உள்வாங்கியுள்ளோம் . இந்த நிகழ்வு நாடு பூராகவும் இடம் பெற்று வருகின்றது.

ஒவ்வொரு இளைஞர்களும் சிறந்த தலைவர்களாகவும்,சிறந்த அரசியல்வாதிகளாகவும்,அரசியலுக்கு உதவி புரிபவர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த தலைமைத்துவ நிகழ்வு நடாத்தப்படுகின்றது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டின் அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்பதும் இதன் நோக்கமாக காணப்படுகின்றது. ஒவ்வொரு இளைஞர்களும் இந்த இலங்கை நாடு சிறந்து விளங்க கைகொடுக்க வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

 மஹிந்த சிந்தனையின் கீழ் இளைஞர்களுக்கான இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு ஒவ்வொரு கிராமமும் இளைஞர்களினால் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் எனும் நோக்குடன் இந்த பயிற்சிகளை நாம் வழங்கி வருகின்றோம். இங்கு பிரதம விருந்தினராக வருகை தந்துள்ள வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சின் இணைப்புச் செயலாளர் அலிக்கான் சரீப் அவர்கள் இந்த மண்ணிலே சாதி,மதத்திற்கு அப்பால் சேவையாற்றி வருகின்றார். இந்த மன்னார் மாவடடத்தின் அபிவிருத்திக்காக தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்து வருகின்றார்.

இந்த வகையிலே இளைஞர்களாகிய நீங்கள் இவருடன் இணைந்து செயற்படுவதன் மூலம் எமது கிராமங்களில் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
எமது கிராமங்களின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாவட்ட பணிப்பாளர் என்.எம்.முனவ்பர். Reviewed by NEWMANNAR on November 18, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.