அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கு,முசலி பிரதேச சபைகளுக்கு தண்ணீர் பௌசர்கள் வழங்கி வைப்பு.படங்கள் இணைப்பு,

மன்னார் முசலி பிரதேச சபைக்கும்,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கும் தண்ணீர் தாங்கி பௌசர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை 'என்-காக்டோ' நிறுவனத்தின் வவுனியா காரியாலயத்தில் இடம் பெற்றது.


 ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஒக்ஸ்பாஃம் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் என்-காக்டோ நிறுவனத்தினால் குறித்த இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது. மன்னார் மாவட்ட முசலி பிரதேச சபைக்கும்,மாந்தை மேற்குப் பிரதேச சபைக்கும் தலா ஒவ்வொரு தண்ணீர் தாங்கிகள் (பத்தாயிரம் லீற்றர் கொள்ளளவு) வழங்கப்பட்டன.





 இவ்வைபவத்தில் என்-காக்டோ நிறுவனத்தின் தலைவர் வி.சி.மகேந்திரன் மற்றும் ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் வடக்கு சிரேஸ்ட நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்.எஸ்.தேவதாஸ்,EU-ACAP நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளர்.எஸ்.யோகராசா, மன்னார் மாவட்ட உள்ளுராட்சித் திணைக்கள உதவி ஆணையாளர்.எம்.ஏ.யே.துரம், முசலி பிரதேச சபை செயலாளர்.ஏ.செபஸ்ரியாம்பிள்ளை, மாந்தை மேற்கு பிரதேச சபை செயலாளர்.எஸ்.nஐனின்ஸ் ஆகியோருடன் என்-காக்டோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். 
மாந்தை மேற்கு,முசலி பிரதேச சபைகளுக்கு தண்ணீர் பௌசர்கள் வழங்கி வைப்பு.படங்கள் இணைப்பு, Reviewed by NEWMANNAR on December 21, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.