மன்னாரில் வெள்ளத்தில் மிதந்து வந்த கண்ணிவெடிகள்!
மன்னார் மாவட்டத்தின் நொச்சிகுளம் வீதியில் நேற்று வெள்ளத்தில் மிதந்து வந்த கண்ணிவெடிகள் இரண்டு மற்றும் கைக்குண்டுகள் இரண்டும் படையினரால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக பொரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில், வவுனியாவில் குளங்கள் நிரம்பி, பெருந்தெருக்களில் கரைபுரண்டு ஒடுவதால் மண் படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போகின்றன. இந்நிலையில், நொச்சிக்குளம் வீதியில் உள்ள மண்படைகள் வெள்ளத்தோடு அள்ளுண்டு போனதையடுத்து, புதையுண்டு கிடந்த வெடிப்பொருட்கள் வெளியில் தெரிந்துள்ளன.
இப்பகுதி மக்கள் இதுகுறித்து படையினருக்கு அறிவித்துள்ளனர். படையினர் அந்த வெடிப்பொருட்களை மீட்டு, செயலிழக்க செய்துள்ளனர். இவ்வாறு மிதந்து வந்த கண்ணிவெடிகள் ஒவ்வொன்றும் 15 கிலோகிராம் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
December 25, 2012
Rating:

No comments:
Post a Comment