மன்னாரில் இடம் பெயர்ந்தவர்களின் தொகை அதிகரிப்பு-10 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைப்பு.
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 3919 பேர் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.
இந்த நிலையில் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் 255 குடும்பங்களைச் சேர்ந்த 872 பேரும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 421 குடும்பங்களைச் சேர்ந்த 1814 பேரும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 611 குடும்பங்களைச் சேர்ந்த 1233 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த மக்கள் 10 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குற்பட்ட தம்பனைக்குளம்,கட்டையடம்பன் ஆகிய கிராமங்களும்,நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை,இராசமடு,இசைமாளத்தாழ்வு,அச்சங்குளம் ஆகிய கிராமங்களும்,முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மருத மடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
இதே சமயம் முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அனைத்து கிராமங்களுக்குமான தரைவழிப்பாதைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளமையினால் இந்த மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்.இதனால் முசலியில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் பாக்திகப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை நானாட்டான் பிரதேசச் செயலாளர் சி.ஏ.சந்திரய்யா மேற்கொண்டு வருகின்றார்.

Reviewed by NEWMANNAR
on
December 26, 2012
Rating:
No comments:
Post a Comment