முசலி – வெளிமலை மீள்குடியேற்ற கிராமத்திற்கான குழாய் குடிநீர் விநியோகம்- பட இணைப்பு.
1990ஆம் ஆண்டு உள்நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
2009ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சமாதான சூழ்நிலையினால் பண்டாரவெளி கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட வெளிமல மக்கள் குடியேற்றப்பட்டனர். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட கடும் வரட்சியினால் முசலி பிரதேசமும் அதிகம் பாதிக்கப்பட்டது. அதிலும் வெளிமல மீள்குடியேற்ற கிராம மக்கள் அதிகமான பாதிப்புக்களை எதிர்நோக்கினர்.
இவ்குடிநீர் பிரச்சினையினை நிவர்த்தி செய்து தருமாறு வன்னி மாவட்ட கைத்தொழில் மற்றும் வாணிபதுறை அமைச்சர் அல்ஹாஜ் றிஷhத் பதியுதீன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. இதன் பயனாக ஐஐசுழு என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் உதவியோடு ரூபா. 800,000 பெறுமதியான குழாய் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டது.
இவ் குடிநீர் விநியோகத்திட்டத்தினை கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் அல்ஹாஜ் றிஷhத் பதியுதீன் அவர்களின் பணிப்புரையின் பேரில் அமைச்சரின் இணைப்புச்செயலாளர் அல்ஹாஜ் அலிகான் ஷரிப் அவர்களினால் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக இப்பிரதேச மக்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
எஸ். எச். எம். வாஜித்
முசலி – வெளிமலை மீள்குடியேற்ற கிராமத்திற்கான குழாய் குடிநீர் விநியோகம்- பட இணைப்பு.
Reviewed by NEWMANNAR
on
December 11, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment