மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நிலையம் அமைக்கும் நடவடிக்கை 15 ஆம் திகதி முதல் மன்னார் விளையாட்டு மைதானப்பகுதியில் ஆரம்பம்.
நத்தார் மற்றும் புதுவருட பண்டிகையினை முன்னிட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்காக வரும் தென்பகுதி வியாபாரிகளுக்கு மன்னார் பொது விளையாட்டரங்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி தொடக்கம் வர்த்தக நிலையங்கள் அமைப்பதற்காண இடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் எஸ்.இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
கடந்த வருடம் பண்டிகைக்கால வியாபார நடவடிக்கைகள் மன்னார் நகர சபை பிரதான வீதியான எஸ்பிலேனட் வீதியில் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் இவ்வருட விற்பனை நடவடிக்கை எவையும் குறித்த வீதியில் நடாத்துவதற்கு எக்காரணம் கொண்டும் மன்னார் நகர சபையினால் அனுமதிக்கப்படமாட்டதென நகர சபை உறுப்பினர் தெரிவித்தேன்.
மேலும் குறித்த கடைகளுக்காண அணுமதிப்பத்திரம் மன்னார் நகர சபையில் விநியோகிக்கப்படுவதாகவும்,விண் ணப்பிக்கும் வியாகாரிகள் 15 x15 சதுர அடி கடைக்கு 12 ஆயிரம் ரூபாவினை கட்டணமாக செலுத்த வேண்டும் என நகர சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இவ்வருட பண்டிகைக்காலத்தை முன்னிட்டு தென் பகுதி வியாபாரிகள் அதிகலவில் மன்னாருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு சகல வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் உறுப்பினர் எஸ்.இரட்ணசிங்கம் குமரேஸ் மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் பண்டிகைக்கால வியாபார நிலையம் அமைக்கும் நடவடிக்கை 15 ஆம் திகதி முதல் மன்னார் விளையாட்டு மைதானப்பகுதியில் ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
December 10, 2012
Rating:
