மன்னாரில் சிகரட் விற்பனை நிலையத்தில் துணிகர கொள்ளைச் சம்பவம்-பட இணைப்பு.,
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள சிகரட் விற்பனை நிலையத்தில் இன்று காலை 10 மணியளவில் துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துஸார தலுவத்த தெரிவித்தார்.
வழமைபோல குறித்த சிகரட் விற்பனை நிலையம் காலை திறக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த பணியாளரான ஸ்ரீதரன் பார்த்திபன் (24 வயது) என்பவர் பணத்தை வங்கியில் வைப்பிலிடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் விற்பனை நிலையத்திற்குள் நுழைந்து கைத்துப்பாக்கியால் மிரட்டி, ஸ்ரீதரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு சுமார் 15 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விஜயம் செய்துள்ளனர். பின்னர் மன்னார் உதவி பொலிஸ் அத்தியட்சகர் உதய ஹேமந்தவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொஸிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸார தலுவத்தவின் தலைமையிலான விசேட பொலிஸ் குழுவினர் துரித தேடுதல் நடவடிக்கையும் மேலதிக விசாரணைகளும் நடத்தி வருகின்றனர்.
மன்னார் பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப் பகலில் இடம்பெற்றுள்ள குறித்த துணிகரக் கொள்ளைச் சம்பவத்தினால் சக வர்த்தகர்கள் மற்றும் மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் சிகரட் விற்பனை நிலையத்தில் துணிகர கொள்ளைச் சம்பவம்-பட இணைப்பு.,
Reviewed by NEWMANNAR
on
December 05, 2012
Rating:
No comments:
Post a Comment