மன்னார் குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது . காணொளிச்செய்தி
மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.இந்த நிலையில் குஞ்சுக்குளத்திற்கான தரை வழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. குஞ்சுக்குளம் தொங்கு பாலத்தடியின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளது.
குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர் மட்ட அளவு 14.2 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. குறித்த பாதைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குளிகள் காணப்படுகின்றது.இதனால் குறித்த கிராம மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனர்
மன்னார் குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது . காணொளிச்செய்தி
Reviewed by Admin
on
December 23, 2012
Rating:
Reviewed by Admin
on
December 23, 2012
Rating:

No comments:
Post a Comment