யாழ். பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்படும்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 16ம் திகதியன்று ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக தரப்புக்களை கோடிட்டு செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கடந்த மாவீரர் தினத்தன்று இடம்பெற்ற நிகழ்வுகளின் படையினர் மேற்கொண்ட தாக்குதல் மற்றும் நான்கு மாணவர்கள் கைதுசெய்யப்பட்டமை என்பவற்றை அடுத்து, மூடப்பட்டது.
இந்தநிலையில் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த மாணவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை பாதுகாப்பு தரப்பு, பல்கலைக்கழக தரப்புக்கு தொலைபேசியின் ஊடாக உறுதியளித்துள்ளதாக கொழும்பில் செய்தி வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், எதிர்வரும் 7ஆம் திகதி பல்கலைக்கழக துணைவேந்தர், பீடங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
January 05, 2013
Rating:

No comments:
Post a Comment