தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில்.
தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் எட்டாவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் இம்மாதம் 26 ஆம் 27 ஆம் திகதிகளில் இடம் பெறவுள்ளது. குறித்த மகா நாட்டில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள்,தலைவர்கள்,செயலாளர்கள் அதிதிகளாக அழைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காண சாத்வீக ரீதியான உரிமை போராட்டத்திற்கு அங்கம் வகிக்கும் தலைவர்களும்,செயலாளர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மகா நாட்டின் முன்னேற்பாடாக மாவட்ட ரீதியான தெரிவுகள் இடம் பெறவுள்ளது.
அதன் நிமித்தம் இம்மாதம் 16 ஆம் திகதி திருகோணமலை,17 ஆம் திகதி அம்பாரை,18 ஆம் திகதி மட்டக்களப்பு,19 ஆம் திகதி யாழ்ப்பாணம்,20 ஆம் திகதி மன்னார்,21 ஆம் திகதி வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் கட்சியின் மாவட்ட ரீதியாக மாவட்ட பொதுக்குழு அங்கத்தவர்களும்,மாவட்ட செயல்குழு அங்கத்தவர்களும்,மாவட்ட செயலாளர்,மாவட்ட துனைச் செயலாளர்,கட்சியின் பொதுக்குழு அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
குறித்த தெரிவுகளை அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன்,உப தலைவர் பிரசன்னா இந்திர குமார்,தலைமை குழு உறுப்பினர் எம்.சிறிகாந்தா,கட்சியின் சுவிஸ்லாந்து நாட்டின் பிரதி நிதி நித்தியானந்தம் ஆகியோர் இணைந்து தெரிவுகளை மேற்கொள்ளவுள்ளனர்.
குறித்த மாநாட்டிற்கு கட்சியின் சர்வதேச பிரதி நிதிகளும் விசேடமாக கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கு அமைவாக சென்ற வாரம் திருகோணமழையில் இடம் பெற்ற கட்சியின் பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் யாப்பில் பல திருத்தங்கள் மேறகொள்ளப்பட்டுள்ளது.
இதனை செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் தேர்தல் ஆணையாளருக்கு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.
குறித்த தேசிய மாநாட்டில் அரசியல் ரீதியாக பல முக்கிய தீர்மாணங்கள் எடுக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன் மேலும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ வின் 8 ஆவது தேசிய மகா நாடு இம்முறை யாழ்ப்பாணத்தில்.
Reviewed by NEWMANNAR
on
January 12, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 12, 2013
Rating:


No comments:
Post a Comment