மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் நிவாரண உதவி.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் நேரடியாக விஜயம் செய்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் அத்தியாவசியப்பொருட்கள் அடங்கிய உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்துள்ளனர்.
இதன் போது சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான முத்தலீப் பாபா பாரூக் அவர்களும் கலந்து கொண்டு மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கி வைத்தார்.
தென்பகுதி வர்த்தகள்கள்,பொது மக்கள்,பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் வழங்கிய உதவிகளின் மூலம் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள் மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட சகல கிராமங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படுகின்றது.
இதே நேரம் மன்னார்,நானாட்டான்,முசலி,மடு ஆகிய பகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் நிவாரண உதவி.
Reviewed by NEWMANNAR
on
January 07, 2013
Rating:
No comments:
Post a Comment