மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் பிரமாண்டமான முத்தமிழ் நிகழ்வு.(படங்கள் )
மன்னார் சிவபூமி; சைவக்கலை இலக்கிய மன்றத்தின் முத்தமிழ் நிகழ்வானது 03.02.2013 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.45 மணியளவில் மன்றத்தின் தலைவர் கலைப்பணி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்களின் தலைமையில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் இந்துக் கலாச்சார மணம் கமிழ கோலாகலமாக ஆரம்பமானது. இந்நிகழ்வில் இடபக் கொடியை சிவஸ்ரீ வீர விஜயபாபுக்குருக்கள் ஏற்றிவைக்க சிவஸ்ரீ கருனானந்தகுருக்கள் ஆசியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இயல் விளக்கை பிரம்மஸ்ரீ மனோ ஐங்கரசர்மாவும் இசை விளக்கை வைத்தியகலாநிதி கதிர்காமநாதனும் நாடக விளக்கை இராமகிருஸ்னனும் ஒளியேற்ற வித்துவான் சிவபாலன் குழுவினரின் மங்கள இசை முழக்கத்துடன் ஸ்ரீ சாகித்திய நாட்டிய கல்லூரி; சிறுமிகளின் வரவேற்பு நடனத்தால் சுவைஞர்கள் அனைவரும் வரவேற்கப்பட்டணர்.
இந்நிகழ்வினை வே.பொ. மாணிக்கவாசகர் தொகுத்து வழங்க நடனம் சிறப்பு பட்டிமன்றம் தமிழ்த்தாய் வாழ்த்து பண்ணிசை நாடகம் என்பன இடம் பெற்றன. இவ்விழாவின் பிரதம அதிதியாக தமிழருவி சிவகுமார் கலந்து சிறப்பித்தார். மன்னார் மாவட்டத்தின் பலபகுதிகளில் இருந்தும் சர்வமத தலைவர்கள் பிரமுகர்கள் கலைஞர்கள் சுவைஞர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வு அரங்கானது மிகவும் அழகாகவும் இந்துக் கலாச்சார முறைப்படி அமைக்கப்பட்டிருந்தது.
.jpg)
மேலும் இந் நிகழ்வில் நடாத்தப்படும் பட்டிமன்றம் வழக்காடுமன்றம் என்பவற்றின் மூலம் சமூகத்திற்க்கு தேவையான நல்ல விடயங்களை கொண்டு சேர்ப்பதும் இலை மறைகாயாக உள்ள கலைஞர்களை வெளிக்கொண்டுவருவதும் கலைஞர்களை கௌரவிப்பதும்; மன்றத்தின் பிரதான நோக்கம் என மன்றத்தின் தலைவர் கலைப்பணி சிவஸ்ரீ மஹா தர்மகுமாரகுருக்கள் அவர்கள் தெரிவித்தார்.
மன்னார் சிவபூமி மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றத்தின் பிரமாண்டமான முத்தமிழ் நிகழ்வு.(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
February 03, 2013
Rating:

No comments:
Post a Comment