மன்னார் மாவட்ட விவசாயிகளின் உண்ணாவிரதப்போராட்டம் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு மாற்றம்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தின் காரணமாக தீடிர் திடீர் என மழை பெய்து வருகின்றது.இதனால் மக்கள் ஒன்று கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனம் தீர்மானங்களை மேற்கொண்டுள்ளமைக்கு அமைவாக எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை முருங்கன் செம்மன்தீவு விளையாட்டு மைதானத்தில் இடம் பெறவுள்ளது.
குறித்த உண்ணாவிரத போராட்டம் முக்கிய 3 கோரிக்கைகளை முன் வைத்து மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட விலையில் நெல் கொள்வனவு செய்ய வேண்டும்,விவசாயிகளுக்கு எரிபொருள் மாணியம் வழங்கப்பட வேண்டும்,விவசாயிகளுக்கு வரட்சி மற்றும் வெள்ள நிவாரணங்கள் உடன் வழங்குவதோடு வங்கிக்கடனை உடன் இரத்துச்செய்ய வேண்டும் என்ற மூன்று அம்சக்கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப்போராட்டம் இடம் பெறவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட விவசாயிகளின் உண்ணாவிரதப்போராட்டம் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு மாற்றம்.
Reviewed by Admin
on
February 18, 2013
Rating:

No comments:
Post a Comment