அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட மதகுருமாரின் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை – அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு இலங்கையின் சில மதகுருமார் அனுப்பி வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பிழையானவை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


 நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் ஆகியன தொடர்பில் நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட மத குருமார் கோரியிருந்தனர்.

 அதி வணக்கத்திற்குரிய பேராயர் இராயப்பு ஜோசப் தலைமையிலான 132 மதகுருமார் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தனிப்பட்ட நபர்கள் எவருக்கேனும் பிரச்சினை இருந்தால் அது தொடர்பில் அரசாங்கத்திடமே அறிவிக்க வேண்டுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.

 மன்னார் பேராயர் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மதத் தலைவர்களுடனும் அரசாங்கம் சிறந்த உறவுகளைப் பேணி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடிதம் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு மதகுருமார் செய்துள்ள முறைப்பாடு பெரும் ஏமாற்றத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 இலங்கைக்கு எதிராக சிலர் குற்றச்சாட்டுக்களை சுமத்திவருகின்ற போதிலும், உண்மை நிலைமகள் அவ்வாறு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை உள்ளிட்ட மதகுருமாரின் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை – அரசாங்கம் Reviewed by Admin on February 25, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.