மன்னாரில் துரிதகதியில் இடம் பெற்று வரும் புகையிரத பாதை வேலைத்திட்டம்.~(படங்கள் )
மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரைக்குமான புகையிரத பாதை அமைக்கும் பணி தற்போது இடம் பெற்று வருகின்றது.
இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னார் மதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரை எந்த பகுதிகளினுடாக புகையிரதப்பாதை அமைக்கப்பட்டிருந்ததே அதே பகுதியூடாக புதிய பாதைகள் அமைக்கப்பட்டு வருவதோடு பழைய புகையிரத தரிப்பிடங்கள் அகற்றப்பட்டு புதிய தரிப்பிடங்கள் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆவணி மாதம் இடம் பெறவுள்ள மடு திருவிழாவின் போது மதவாச்சியில் இருந்து மடு வரை புகையிரதச் சேவை நாடத்துவதற்கு ஏற்ற வகையில் குறித்த புகையிரத பாதைகள் துரித கதியில் அமைக்கப்பட்டு வருவதாக குறித்த பணியில் ஈடுபட்டு வரும் இந்திய தொழில் நுற்பவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
தற்போது சிறுநாவற்குளம் பகுதியில் ஏற்கனவே காணப்பட்ட புகையிரத தரிப்பிடம் அகற்றப்பட்டு புதிய தரிப்பிடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
-மிகுதி பணிகள் 2014 ஆம் ஆண்டு ஐனவரி மாதத்திற்குள் முடிவடைந்து விடும் எனவும் குறித்த தொழில் நுற்பவியலாளர் மேலும் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னாரில் துரிதகதியில் இடம் பெற்று வரும் புகையிரத பாதை வேலைத்திட்டம்.~(படங்கள் )
Reviewed by NEWMANNAR
on
February 13, 2013
Rating:
No comments:
Post a Comment