அண்மைய செய்திகள்

recent
-

எருக்கலம்பிட்டிக்கு 2700 இந்திய வீடுகள் வழங்கப்படவில்லை: மேலதிக அரசாங்க அதிபர்


இந்திய அரசாங்கத்தால் மன்னார் மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் மன்னார், எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு 2,700 வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நந்தினி ஸ்ரான்லி டி மெல் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டத்தில் தற்போது இந்திய வீட்டுத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வீட்டுத்திட்டம் தொடர்பில் பல வதந்திகளும் பிரச்சினைகளும் தலை தூக்கியுள்ளமை தெரியவருகின்றது.

மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 7,500 வீடுகளை அமைப்பதற்காக 4 வருடத் திட்டத்தின் கீழான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையிலேயே  இந்திய அரசாங்கத்தின்  வீட்டுத்திட்டமும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார். 

தற்போது இந்திய வீட்டுத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்தத் திட்டத்தில் இந்திய தூதுவராலயத்தினால் வழங்கப்பட்ட பிரமாணங்களுக்கு அமைய பயனாளிகளின் தெரிவும் இடம்பெற்றுவருகின்றன.  இந்தப் பயனாளிகள் தெரிவிற்காக பிரதேச செயலகங்களின் உதவியுடன் மாவட்ட செயலகம் ஊடாக தற்போது அந்தக் கிராமத்தில் வசிப்பவர்களின் மொத்த தொகையானது ஜனாதிபதி செயலணி குழுவிற்கும் இந்திய தூதுவராலயத்திற்கும் அனுப்பப்பட வேண்டும்.

இந்த வகையில் தற்போது இரண்டாம்  கட்டத்திற்கென தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களில் மன்னார், எருக்கலம்பிட்டியில் பதிவுசெய்யப்பட்ட சனத்தொகையின் விபரம் 2,700 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை வழங்கப்பட்ட வீடுகளின் தொகை என கருதி சில பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.  

எருக்கலம்பிட்டி கிராமத்தில் இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பயனாளிகள் தெரிவு நடவடிக்கையின் மூலம் 2,700 குடும்பங்களில் 530 குடும்பங்கள் மட்டுமே 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்கின்றார்கள். 10 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட முடியும் என்பது இத்திட்டத்தின் ஒரு பிரமாணமாகும்.

இதன் பின் தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்குமிடத்து அவை பரிசீலிக்கப்பட்டு பின்னரே இறுதிப் பயனாளிகள் தெரிவு இடம்பெறும் என மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் மேலும் தெரிவித்தார்.
எருக்கலம்பிட்டிக்கு 2700 இந்திய வீடுகள் வழங்கப்படவில்லை: மேலதிக அரசாங்க அதிபர் Reviewed by NEWMANNAR on February 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.