மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான அவசர கலந்துரையாடல்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் வரட்சியின் காரணங்களினால் மன்னார் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கை அழிவடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எதிர் நோக்கும் நஸ்டங்களை ஈடுசெய்யும் முகமாக அவர்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான அவசர கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் உயிலங்குளம் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம் பெறவுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலுக்கு விவசாய அமைப்புக்களின் தலைவர்,செயலாளர்,பிரதான வாய்க்கால் அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மற்றும் விவசாயிகள் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்ச்செய்கை அழிவடைந்தது.
இதன் போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய முறையில் நிவாரணம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையிலே குறித்த விவசாயிகளின் நலன் கருதி குறித்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
(மன்னார் நிருபர் வினோத் )
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுடனான அவசர கலந்துரையாடல்.
Reviewed by NEWMANNAR
on
February 08, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment