அண்மைய செய்திகள்

recent
-

ஹலால் சர்ச்சையால் அமைச்சரவையில் அமளி!


ஹலால் விவகாரம் தொடர்பான சர்ச்சையினால் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ தலைமையில் நேற்றுக் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது.

ஜனாதிபதியின் தலைமையில் நேற்றுக்காலை பத்துமணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற போது, முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் இடம்பெறும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். 
இதன்போது என்ன நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது பற்றிக் கலந்துரையாடப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்தில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சில கருத்துகளைச் சொல்ல முயன்றபோதே முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாகப் பொங்கி எழுந்தனர்.
ஹலால் முறைமையை மற்றையவர்கள் மீது திணிக்க முயற்சிகள் எடுக்கப்படுவ தாகவும், இது ஒரு பலாத்காரமான செயல் என்றும் சாடிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டப் பேரணி நடத்த எவருக்கும் உரிமை உண்டெனவும் கூறினார்.
இதனையடுத்து கடும் ஆத்திரமடைந்த முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சர் சம்பிக்கவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கான உரிமை யாருக்கும் இருக்கலாம். ஆனால் ஒரு மதத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களையும் எதிர்ப்புகளையும் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று நீதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வருமான ரவூப் ஹக்கீம் இதன்போது கடும்தொனியில் தெரிவித்தார். 
முஸ்லிம் களைச் சீண்டிச்சீண்டி அவர்களைப் பொறுமையிழக்கச் செய்ய சில சக்திகள் இயங்குவதாகக் குற்றஞ்சாட்டிய ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி இது விடயத்தில் உடனடி நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் அரசு மீது அப கீர்த்தி ஏற்படும் நிலைமை உருவாகக் கூடுமென்றும் முன்னெச்சரிக்கை விடுத்தார்.
அதேபோல், அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இதன் போது கருத்து வெளியிட்டு முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு கண்டனத்தைத் தெரிவித்தார். இந்த வாக்குவாதங்களை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இந்தச் சர்ச்சைகளை முடிவுக்குக் கொண்டு வர அரசிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் முதலில் ஒன்றுசேர்ந்து பேச்சு நடத்த வேண்டுமெனப் பணிப்புரை விடுத்தார்.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பெரும்பாலான நேரம் ஹலால் தொடர்பான வாதப்பிரதிவாதங்களிலேயே கழிந்தது.
ஹலால் சர்ச்சையால் அமைச்சரவையில் அமளி! Reviewed by NEWMANNAR on February 15, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.