சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன்!
இலங்கையில் நடந்த மனித உரிமைமீறலுக்கும் யுத்தக்குற்றத்திற்கும் எந்த தீர்மானத்தை கொண்டு வந்தாலும் போதாது என்று தெரிவித்துள்ள மனித உரிமை ஆர்வலரும் பாகுபாட்டிற்கு எதிரான சர்வேச மக்கள் இயகத்தின் தலைவருமான கலாநிதி நிமல்கா பெர்னாண்டோ இம்முறை இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்டவுள்ள தீர்மானம் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தினக்குரல் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ இலங்கை அரசுமீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெரிவித்த நீண்ட செவ்வியின் முக்கிய கருத்துக்களின் தொகுப்பு
யுத்தக்குற்றத்திற்கு தண்டனை வேண்டும்
இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறலிலும் யுத்தக்குற்றச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. இதனை நிருபிக்கும் வகையில் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டமை தொடர்பான படங்கள் வெளிவந்துள்ளன என்று தெரிவித்துள்ள நிமல்கா பெர்னாண்டோ யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழிர்களை மனிதாபிமான நடவடிக்கையில் கொன்றதாக அரசு தட்டிக்கழிக்கிறது என்றார்.
இதை எல்லாம் சிங்கள ஊடகங்கள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு கீழ் கட்டுப்பட்டு வெளியிடமுடியாமல் இருக்கின்றன. இங்குதான் சிங்களவர்களால் கொல்லப்பட்ட தமிழர்கள் என்பதை உணர்த்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ.
உயிருடன் ஒரு சிறுவனை பிடித்துக்கொன்றமைக்கு சாட்சியங்கள் உண்டு. சனல் 4 வீடியோ அனைத்துமே மனித உரிமைகள் மீறல்களுக்கு சாட்சிகளாக அமையும். இந்த அடிப்படையில் இலங்கை அரசாங்கம் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
அமெரிக்கா, சீன – இலங்கை உறவு பிடிக்காமை தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வரலாம். அதேபோல எல்லா நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் தேவைக்காகத்தான் எதிர்ப்பும் ஆதரவும் காட்டுகின்றன. எப்படியான போதிலும் மனித உரிமைமீறல்கள் யுத்தக்குற்றங்கள் என்பவற்றுக்காக எந்தவொரு நாடும் அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று மேலும் குறிப்பிட்டார் நிமல்கா பெர்னாண்டோ.
அரசியல் தீர்வு அவசியம்
சர்வதேசம் இலங்கைக்கு எதிராக செயற்படுவதால் தனது முக்கியத்துவத்தை உயர்த்த முடியும் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ உலக நாடுகளில் தமிழ் மக்கள் சட்ட விரோதமாக குடியேறுவது முதல் எல்லாப் பிரச்சினைக்கும் ஒரே தீர்வாக அமைவது இலங்கையில் அரசியல் தீர்வு ஒன்றை அமுல் படுத்துவதே ஆகும் என்று குறிப்பிட்டார்.
குற்றங்களில் பொன்சேகாவுக்கும் பங்குண்டு
ஐ.நாவின் விசாரணைகளுக்கு எதிராகவே பொன்சோ செயற்படுவார் என்று தெரிவித்த நிமல்கா பெர்னாண்டோ யுத்ததில் பொன்சேகாவுக்கும் முக்கிய பங்குண்டு என்று சுட்டிக்காட்டினார்.
இந்த விடயத்தில் அரசை எதிர்த்தால் இவரும் சிக்கிக்கொள்வார் என்ற நிலையில் இருந்துதான் பேசுகின்றார். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்காக முன்னாள் இராணுவத்தளபதி என்ற வகையில் பொன்சேகாவும் பொறுப்புக்கூற வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
விசாரணை தேவை
தமிழர்களை ஏமாற்ற முடியாது. இவர்கள் இன்று சர்வதேசத்தின் உதவியுடன் ஜெனிவாவில் உறுதியாகப் போராடுகிறார்கள் என்று குறிப்பிட்ட நிமல்கா பெர்னாண்டோ தற்போது கொண்டுவந்துள்ள தீர்மானத்தை நாங்கள் ஏற்றக்கொள்ளவில்லை என்றார்.
சர்வதேசம் இலங்கைக்கு ஒரு சந்தர்பபத்தை வழங்கியுள்ளது. எல்.எல்.ஆர்.சி அறிக்கை ஒரு பக்கம் சார்பானது. அதையே நடைமுறைபடுத்த மாட்டோம் என்கிறது அரசு. அதனால் மேலும் கடுமையான ஒரு தீர்மானத்தை ஐ.நா கொண்டு வரவேண்டும் என்று மேலும் குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் மனித உரிமை பேரவைக்கு கையெழுத்திட்ட நாடு என்ற வகையில் இலங்கை பதிலளிக்க வேண்டியது அதன் கடமை என்று கூறிய நிமல்கா பெர்னாண்டோ அரச சார்பற்ற நிறுவனம் என்ற வகையில் சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை அமைத்து அதனுடாக இலங்கை விசாரிக்கப்பட வேண்டும் என்றார் அழுத்தமாக.
சிங்களவராக பிறந்தத்திற்காக வெட்கப்படுகிறேன்!
Reviewed by NEWMANNAR
on
February 28, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 28, 2013
Rating:

No comments:
Post a Comment