அண்மைய செய்திகள்

recent
-

கடத்தப்பட்ட எனது மகன் உயிருடன் இருக்கிறான்! மீட்டுத் தாருங்கள்! பேரணியில் கலந்துகொண்ட தாயின் புலம்பல்

பூசா முகாமிலிருந்தும் வவுனியா முகாமிலிருந்தும் எனது பிள்ளை இருப்பதாக கடிதம் வந்தது. விசாரணைகள் முடிந்து விட்டன. ஆனால் 5 வருடமாகி விட்ட நிலையிலும் இதுவரை எனது பிள்ளையை காட்டவில்லை. ஆனால் எனது பிள்ளை உயிருடன் இருக்கின்றது. எனது பிள்ளையை மீட்டுத் தாருங்கள்' என கடத்தப்பட்ட மகனின் தாயொருவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


 சுதந்திரத்திற்கான அரங்கு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைமையில் காணாமல் போன உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கங்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திலேயே தாய் ஒருவர் மேற்கண்டவாறு கண்ணீர் மல்கக் கூறினார். இதேவேளை, அமைதியான முறையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட நிகழ்வில் வடக்கில் இருந்து கலந்து கொள்ளவிருந்த காணாமல் போனோரின் உறவுகள் கலந்து கொள்ளாத நிலையிலும் இன்று காலை 9.30 மணியளவில் கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நடைபெற்றது.

 இந்த அமைதிப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக 12 பஸ்களில் வந்தபோது அவர்களை பொலிஸார் வவுனியாவில் வைத்து உங்களுக்கு இரவில் பிரயாணம் செய்வது பாதுகாப்பு இல்லையென்றும் ஆகவே காலையில் பயணத்தை மேற்கொள்ளலாம் எனக் கூறியும் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

 இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்ன, ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன, சிறிதுங்க ஜயசூரிய, கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி, கிறிஸ்தவ மதகுருமார்கள் மற்றும் காணாமல் போனோரின் உறவினர்கள் சிலரும் இதில் கலந்து கொண்டனர்.
கடத்தப்பட்ட எனது மகன் உயிருடன் இருக்கிறான்! மீட்டுத் தாருங்கள்! பேரணியில் கலந்துகொண்ட தாயின் புலம்பல் Reviewed by Admin on March 06, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.