இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகிலான புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 250 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தே இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று இந்திய செய்திகள் மேலும் தெரிவித்தன.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
Reviewed by Admin
on
March 15, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment