கிளிநொச்சியில் கூட்டமைப்பு அலுவலகம் மீது கல் வீச்சு; 13பேர் காயம் காணொளி
இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கட்சி உறுப்பினர்கள் ஆதரவளர்கள் என 13 பேர் காயமடைந்துள்ளனர். உடமைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
கூட்டத்தைக் குழப்புவதற்கென 50க்கும் மேற்பட்டவர்கள் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலக்தின் முன் இறக்கப்பட்டநிலையில் அவர்கள் இந்த மிலேச்சத்தனத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குழப்பம் விளைவித்த அனைவரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
கூட்டத்துக்கு பாதுகாப்பு வழங்கவென நின்றிருந்த பொலிஸார் முன்னிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆர்பாட்டம் நடத்துவது போல வந்திறங்கிய இவர்கள் கூட்டமைப்புக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறு கட்சி அலுவலகத்திக்குள் புகுந்து கற்களை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கிளிநொச்சி பொலிஸ் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்குவந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலில் ஈடுபட்டட ஒருவரை பொதுமக்கள் பிடிக்கப்பட்ட பொலிஸாரிடம் ஒப்படைத்த போதும் அவர்கள் குறித்த நபரைக் கைதுசெய்யவில்லலை என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சியில் கூட்டமைப்பு அலுவலகம் மீது கல் வீச்சு; 13பேர் காயம் காணொளி
Reviewed by NEWMANNAR
on
March 30, 2013
Rating:
No comments:
Post a Comment