அண்மைய செய்திகள்

recent
-

சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது: இரா.சம்பந்தன்

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அரசாங்கம் கூறியுள்ளது. இது நம்பகமான, சுயாதீனமான விசாரணை அல்ல. எனவே ஒரு சர்வதேச விசாரணைக்கு இது வழிசமைத்துள்ளது. அவ்வாறான சர்வதேச விசாரணையொன்று வருவதை எவராலும்  தவிர்க்க முடியாது' தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், இலங்கைக்கு எதிராக மீண்டும் ஒரு தீர்மானம் இந்த ஆண்டு வரும் என்று நாக்ங்கள் எதிர்பார்க்கின்றோம். இலங்கை உரிய நடவடிக்கைகளை எடுக்காததன் விளைவுகள் மீண்டும் இப்போது நிறைவேற்றப்பட இருக்கும் தீர்மானத்தில் உள்ளடக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கின்றோம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஜெனீவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இது தொடர்பில் பி.பி.சி.க்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றியுள்ள சம்பந்தன், 'இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விடயங்கள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கருத்தை தேவையான இடங்களுக்கு தெரிவித்துள்ளது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

'ஐ.நா மனித உரிமை பேரவை கூட்டத்தில், இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில், இலங்கையின் பிரதிநிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்த கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை. எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக அவரது உரை அமையவில்லை. மாறாக நிலைமையை குழப்பும் நோக்கிலேயே அது அமைந்திருக்கிறது' என்றும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார். 

'ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் உரை மீது குற்றங்களை சுமத்துவதையே அமைச்சரின் உரை நோக்கமாகக் கொண்டிருக்கிறது, இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்பதைப் பற்றி அவ்வுரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதை ஏனைய நாடுகள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் என்று தான் நம்புவதாக' அவர் கூறினார்.

'இலங்கை அரசு, உள்நாட்டு விசாரணை மூலமாக உண்மையைக் கண்டறியும் என்று யாரும் எதிர்பார்த்தால், அவ்விதமான ஒரு விசாரணை இலங்கையில் நடைபெறுவது சாத்தியமில்லை என்றே தற்போது தெளிவாகத் தெரிகிறது. அவ்விதமான உண்மையைக் கண்டறியும் விசாரணைக்கு இலங்கை அரசு எவ்வித ஒழுங்கும் செய்யவில்லை. 

வெறும் இராணுவ விசாரணை ஒன்றை நடத்தி, தாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று அது கூறிவிட்டது இது ஒரு நம்பகமான, சுயாதீனமான விசாரணை அல்ல. எனவே இந்த நிலையில், ஒரு சர்வதேச விசாரணைக்கு இடமுண்டு. அது இன்றில்லாவிட்டாலும் எதிர்காலத்தில் வந்தே தீரும், இலங்கையின் நடத்தையை வைத்துப் பார்க்கும்போது அது வருவதை யாரும் தவிர்க்க முடியாது' என்றார் சம்பந்தன்.
சர்வதேச விசாரணையை இலங்கை தவிர்க்க முடியாது: இரா.சம்பந்தன் Reviewed by Admin on March 05, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.