இராஜதந்திரிகள் மன்னார் விஜயம்
கொழும்பை தளமாகக் கொண்ட இராஜந்திரிகள் குழுவொன்று மன்னாருக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த வார இறுதியில் கொழும்பிலுள்ள உயர் ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்கள் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.இந்த தூதுக்குழுவில் பலஸ்தீன், பாகிஸ்தான், ஈரான், ஈராக் மற்றும் மலேசியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் உள்ளடங்குகின்றனர்.
அமைச்சர் றிசாத் பதியுதீனின் அழைப்பின் பேரில் செல்லும் இந்த இராஜதந்திரிகள் தூதுக்குழுவிற்கு பலஸ்தீன் தூதுவரும் கொழும்பிலுள்ள இராஜந்திரிகள் அமைப்பின் தலைவருமான கலாநிதி அன்வர் அல் அகா தலைமை தாங்குகின்றார்.
அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றப்பட்டுள்ள செயற்பாடுகளை நேரில் அவதானிப்பதுடன் இவர்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களையும் சந்திக்கவுள்ளனர்
இராஜதந்திரிகள் மன்னார் விஜயம்
Reviewed by Admin
on
March 29, 2013
Rating:
Reviewed by Admin
on
March 29, 2013
Rating:

No comments:
Post a Comment