அண்மைய செய்திகள்

recent
-

இரு தசாப்தங்களின் பின் தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள்


25 வருடங்களுக்கும் மேற்பட்ட காலம் தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

மோதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டில் இருந்து அகதிகளாக வெளியேறிய சிலரே நேற்றிரவு தாயகம் திரும்பியுள்ளனர்.


இவர்கள் நாடு திரும்புவதற்கான வசதிகளை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் வழஙகியிருந்தது.

தமிழகத்தில் இருந்து நாடு திரும்பிய 28 இலங்கையர்களில் 13 சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

யுத்தம் இடம்பெற்றபோது இவர்கள் மன்னாரில் இருந்து தமிழகத்திற்கு மீன்பிடி படகுகள் மூலம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இரு தசாப்தங்களின் பின் தாயகம் திரும்பிய இலங்கை அகதிகள் Reviewed by NEWMANNAR on March 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.