பேசாலை சென்.விக்டரிஸ் அணியை வீழ்த்தியது பெரியகடை ஸ்டார் ஈகிள் அணி ஆரம் துடுப்பாட்ட வீரர் றோய் சாதனைச் சதம்-படங்கள்
2013ம் ஆண்டு ஆPடு கிரிக்கெட் போட்டியின முன்னிட்டு அதில் பங்குபற்றும் அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ 20-20 போட்டிகள் தற்பொழுது ஆரம்பமாகியுள்ளது. இதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பேசாலை விளையாட்டு மைதனத்தில் பெரியகடை ஸ்டார் ஈகிள் அணிக்கும் பேசாலை சென்.விக்டரிஸ் அணிக்குமிடையில் 20-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவுசெய்த சென்.விக்டரிஸ் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 பந்து பரிமாற்றங்களில் 08 இலக்குகளை இழந்து 186 ஓட்டங்களை பெற்றனர். துடுப்பாட்டத்தில் சென்.விக்டரிஸ் அணிசார்பாக அதிரடியாக ஆடிய விவேக் 39 ஓட்டங்களையும், கங்கா 31 ஓட்டங்களையும், அஜித் 30 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் ஸ்டார் ஈகிள் அணி சார்பாக றோய் மற்றும் அமல் தலா இரண்டு இலக்குகளை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு 187 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த ஸ்டார் ஈகிள் அணியினர், ஆரம்ப அதிரடி துடுப்பாட்ட வீரர் றோயின் அதிரடி சதத்துடன் வெறும் 14.1 ஓவரில் 03 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கினை அடைந்தனர். துடுப்பாட்டத்தில் ஸ்டார் ஈகிள் அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான றோய் 51 பந்துகளில் 08 ஆறு ஓட்டங்கள் 13 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்களாக 117 ஓட்டங்களையும், ஜெனுஸ் 16 பந்துகளில் 03 ஆறு ஓட்டங்கள் 03 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 33 ஓட்டங்களையும் அதிகபட்ச ஓட்டங்களாக பெற்றனர். பந்து வீச்சில் சென்.விக்டரிஸ் அணிசார்பாக செல்வா 02 இலக்குகளையும் ஆனந்த் 01 இலக்கினையும் கைப்பற்றினார்கள்.
இப்போட்டியில் ஸ்டார் ஈகிள் அணியின் றோய் வெறும் 46பந்துகளில் சதம் அடித்து மன்னார் கிரிக்கெட் வரலாற்றில் புதியசாதனையை பதிவுசெயதுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Star Eagles
Star Eagles
பேசாலை சென்.விக்டரிஸ் அணியை வீழ்த்தியது பெரியகடை ஸ்டார் ஈகிள் அணி ஆரம் துடுப்பாட்ட வீரர் றோய் சாதனைச் சதம்-படங்கள்
Reviewed by NEWMANNAR
on
March 25, 2013
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 25, 2013
Rating:



No comments:
Post a Comment